நல்லூர் ஆலய திருவிழா காலத்தில் - வியாபார நிலையங்களுக்கு இம்முறை கடும் கட்டுப்பாடுகள்

ஆசிரியர் - Admin
நல்லூர் ஆலய திருவிழா காலத்தில் - வியாபார நிலையங்களுக்கு இம்முறை கடும் கட்டுப்பாடுகள்

யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா காலத்தில் அமைக்கப்படும் வியாபார நிலையங்களுக்கு இம்முறை கடும் கட்டுப்பாடுகள் விதிக்க ப்படும் என யாழ்.மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் தெரிவித்துள்ளார். 

யாழ்.மாநகர சபையின் 6 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. இதன்போது நல்லூர் ஆலய திருவிழா காலங்களில் வியாபார நிலை யங்களுக்கு அனுமதி வழங் குவது தொடர்பான விடயம் எடுத்துக்கொள்ளப்பட்டது. 

அதன்போதே மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளார்.  இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.நல்லூர் ஆலய சுற்றாடலில் மொத் தமாக 307 வியாபார நிலையங்கள் அமைப் பதற்கான அனுமதிகள் கேள்வி கோரல் ஊடாக வழங்கப்படவுள்ளன. ஒரு பகுதி கேள்விகோரல் முடிந்துள்ள நிலையில் அடுத்த கேள்வி கோரலுக்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. 

இதில் வறுமைக்கோட்டுக்குட்பட்டவர் கள், பெண்தலைமைத்துவ குடும்பங்களு க்கு  கடைகள் கொடுக்கப்பட வேண்டும் என் பது ஒரு கோரிக்கையாக உள்ளது. அவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இந்நிலையில் ஆலய நிர்வாகத்தினர் இவ் வியாபார நிலையங்கள் அமைப்பது  தொடர்பில் ஒரு கோரிக்கை ஒன்றினை முன் வைத்துள்ளனர். 

குறிப்பாக ஆலய நிர்வாகத் தினால் ஆலய வெளி வீதியில் ஆலயத்தின் புனித தன்மையினை கருத்தில் கொண்டு அங்கு கட்டப்படும் சிவப்பு வெள்ளை துணிக ளின் எல்லைக்கு சற்று  அப்பால் வியாபார நிலையங்களுக்கான அனுமதி வழங்கு மாறு கோரியுள்ளனர். அக் கோரிக்கையினை ஏற்றே இம்முறை வியாபார நிலைய ங்களுக்கான அனுமதி வழங்கப்படும். 

மேலும் கடந்த காலங்களில் வியாபார நிலையங்களுக்கான கேள்வி கோரலின் போது, வியாபார நிலையங்களின் உரித்தை பெறுகின்றவர்கள், பின்னர் மாநகர சபைக்கு செலுத்திய பணத்தினை விட பன்மட ங்கு பணத்திற்கு அந்த உரிமத்தை விற் பனை செய்து வந்துள்ளனர். 

இதனால் இம்முறை கேள்வி கோரலின் போது அவ்வியாபார நிலையத்தை பெற்றுக் கொள்பவரே ஆலய திருவிழா முடியும் வரை அவ்வியாபார நிலையத்தை நடத்த முடியும். வேறு யாரும் அவ்வியாபார நிலையத்தை நடத்துவது, அல்லது வேறு யாருக்கும் உரி மத்தை விற்பனை செய்வது தொடர்பில் கண் டறியப்பட்டால் உடனடியாக அவரின் வியா பார உரிமம் ரத்துச் செய்யப்படும் என தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு