யாழ்.மாநகரசபையை திறம்பட இயங்கவிடாமல் முதலமைச்சர் தடுக்கிறார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபையை திறம்பட இயங்கவிடாமல் முதலமைச்சர் தடுக்கிறார்..

யாழ்.மாநகரசபையை திறம்பட செயற்பட விடாமல் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரன் தடுப்பதாக பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருக்கும் யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்,

மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமலும், மாநகர சபை உறுப்பினர்களின் தேவைகளைக் கருத்தில் கொள்ளாமலும் வடமாகாண உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் ஊடாகவே 

முதலமைச்சர் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளுகின்றார் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

யாழ்.மாநகர சபையின் 6 ஆவது அமர்வு இன்று செவ்வாய் கிழமை காலை நடைபெற்றது.

இதன் போது கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாநகர சபையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் வடமாகாண உள்ளூராட்சி அமைச்சு நடக்கின்றது. குறிப்பாக அவ்வமைச்சு அனுப்பும் சுற்று நிருபங்கள் ஊடாக இக் கட்டுப்படு விதிக்கப்படுகின்றது.

கொழும்பு மாநகர சபையை எடுத்து பார்தால் அவர்கள் மக்கள் சேவையை திறம்பட செய்வதற்க்காக பல வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. குறிப்பாக உறுப்பினர்களுக்கான போக்குவரத்து, தொலைபேசி, உபசரண செலவு என்பவை உட்பட பல மேலதிக செலவுகள் வழங்கப்படுகின்றது.

ஆனால் யாழ்.மாநகரத்திற்க்கு சேவை செய்யும் உறுப்பினர்களுக்கு இவ்வாறான கொடுப்பனவுகளை மட்டுப்படுத்தியுள்ளது. வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் இன் நடவடிக்கையை ஏற்க்க முடியாது. இது போன்று பல விடயம் நடக்கின்றது. 

எல்லாவற்றையும் சபையில் சொல்ல முடியாது. உறுப்பினர்களையும், அதிகாரிகளையும் வேலை செய்யாமல் தடுக்கவே இவ்வாறான சுற்று நிருபம் அனுப்பப்படுகின்றது. 30 வருடமாக பின்னோக்கி நலிந்து போயிருக்கிம் எங்களை கெளரவ குறைவாக நடத்த அனுமதிக்க முடியாது என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு