தென்னிந்தியா-பலாலிக்கு குறைந்த கட்டணத்தில் விரைவில் விமான சேவை. - ஜோன் அமரதுங்க

ஆசிரியர் - Editor I
தென்னிந்தியா-பலாலிக்கு குறைந்த கட்டணத்தில் விரைவில் விமான சேவை. - ஜோன் அமரதுங்க

 

இந்திய சுற்றுலா பயணிகள் வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொள்ள மிக விரைவில் ஒரு குறைந்த கட்டண விமான சேவை தென்னிந்தியாவில் இருந்து பலாலிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. 

இந்த தகவலை சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுப் பயணிகள் வடக்கு மாகாணத்துக்குப் பயணங்களை மேற்கொள்வதில், பல்வேறு பயணப் பிரச்சினைகள் உள்ளன. 

இதனால் தென்னிந்தியாவுடன் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு இணைப்பை ஏற்படுத்தும் திட்டங்கள் அதிக நன்மை பயக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தென்னிந்தியாவிலிருந்து குறைந்த கட்டணத்தில் பலாலிக்கு விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளோம்.  

இதன் மூலம், இந்திய சுற்றுலாப் பயணிகள் வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் இலகுபடுத்தப்படும்.

அத்துடன் தற்போது ஸ்ரீலங்கா விமானப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள பல விமான நிலையங்கள், உள்நாட்டு விமான நிலையங்களாக மாற்றியமைக்கப்படவுள்ளன.

மட்டக்களப்பு விமான நிலையம் ஏற்கனவே பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதுபோல, விரைவில் ஹிங்குராக்கொட விமான நிலையமும் பயணிகள் போக்குவரத்துக்காக திறந்து விடப்படும் ” என்றும் அவர் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு