'இது இருளின் இசை' - ஜூலைக் கலவர இசை வெளியீடு
ஜூலை கலவரத்தின் ஆவணப்படுத்தலாக 'இது இருளின் இசை' இறுவெட்டு வெளியீட்டுவிழா இன்று மாலை யாழ்ப்பாணத்திலுள்ள வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் கலை பண்பாட்டு பிரிவினரால் உருவாக்கப்பட்ட பத்து பாடல்களை கொண்ட 'இது இருளின் இசை' என்ற இறுவெட்டானது தமிழ் தேசீய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.