அரச அதிகாரிகளுடைய கவனயீனம் கவலையளிக்கிறது..
மாவட்டச் செயலகங்களில் நிறைவேற்றும் தீர்மானங்களை உரிய திணைக்களங்களிற்கு அனுப்பி நடைமுறைப்படுத்த வேண்டிய அரச அதிபர்கள் இதுவரை காலமும் அவ்வாறு செயல்படவே இல்லை .
என்பது தற்போது தெளிவாகத் தெரிகின்றது. என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர். இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
வடக்கு கிழக்கு மாகாணத்தில் மக்கள் வாழ்விடம் மற்றும் வாழ்வாதார நிலங்கள் தற்போது வனவளத் திணைக்களத்தின் ஆளுகையில் இருந்து அவற்றினை விடுவித்து தருமாறு வனவளத் திணைக்களத்திடம்
கோரப்பட்ட நிலங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் தலமையில் கடந்த 26ம் திகதி ஜனாதிபதி மாளிகையில் ஓர் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் இதில் வடக்கு கிழக்கு மாகாணங்களின்
மாவட்டச் செயலாளர்களுடன் காணி , மீள்குடியேற்றம் , வனவளம் , வனஜீவராசிகள் , விவசாய அமைச்சுக்களின் செயலாளர்களும் கலந்துகொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் வனவள அமைச்சின் செயலாளர் மாவட்ட அரச அதிபர்களால் கோரப்பட்ட நிலங்களாக தெரிவித்த அளவு வியப்பை ஏற்படுத்துகின்றன.
அத்துடன் தொழில் நுட்பக் குழுவின் அறிக்கையே தம்மால் கவனத்தில்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளனர். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தீர்மானம் கவனத்தில்கொள்ளப்படவேயில்லை.
அவ்வாறானால் மாவட்டங்களிற்கு இணைத் தலைவர்கள் எதற்கு ஒருங கிணைப்புக் குழுக்கள் எதற்கு. இதற்காக பெரும் செலவில் ஒன்றுகூடித் தீர்மானிக்கும் முடிவினைவிடவும் நிர்வாக அதிகாரிகளை
மட்டுமே கொண்டுள்ள தொழில் நுட்பக் குழுவின் அறிக்கையே கவனத்தில்கொள்ளப்படும். என்பது பாரதூரமானது.
எனவே இவ்வாறான விடயங்கள் தொடர்பில். மக்களிற்காக கோரிய நிலங்களில் அதிகமானவை மக்கள் ஏற்கனவே வாழ்ந்த மற்றும் வாழ்வாதார நிலங்கள் என்பதனால் ஒருங்கிணைப்புக் குழுத் தீர்மானம் ,
தொழில் நுட்பக் குழுவின் தீர்மானம் அதன்பின்பு சூழல் தாக்கம் பற்றிய ஆய்வு அறிக்கை எனக் கூறியே 6 ஆண்டுகள் கடந்துவிட்டன. இனி மீண்டும் விபரம் சேகரித்து இத்தனை ஆய்வுகளின் பின்பு
என்றால் நிச்சயமாக இது காலம் கடத்தும் செயல்பாடே அன்றி மக்களின் நிலத்தை மக்களிற்கு வழங்கும் நோக்கம் இருப்பதாக துளியளவும் தெரியவில்லை.
இதற்கான கொழும்பில் கூடினால் மாவட்டத்தில் பேசுமாறும் மாவட்டத்தில் கூடும்போது கொழும்பில் ஆராயுமாறும் காலத்தை கடத்தி தமிழ் மக்களிற்கு சலிப்பை ஏற்படுத்தாது ஜனாதிபதி நேரில் தலையிட்டு
ஒரே நாளில் கொள்ளை ரீதியில் முடிவினை எடுத்து இந்த நிலங்களை விடுவிப்பதன் மூலம் அந்த மக்களிற்கான நின்மதியான வாழ்வியலையும் இந்த நாட்டிற்கான பொருளாதாரத்தையும் வளர்க்க முடியும். என்றார்.