மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்ட தீர்மானங்களை கண்டு கொள்ளாத வனவள திணைக்களம்..

ஆசிரியர் - Editor I
மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்ட தீர்மானங்களை கண்டு கொள்ளாத வனவள திணைக்களம்..

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்குகொள்ளும் வனவளத் திணைக்கள அதிகாரிகள் மற்றும்மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தமது தலமைப் பணிமனைகளிற்குகூட விசுவாசமாகப் பணியாற்றுவது கிடையாது மற்றும்மற்றும்எ

ன்பது தெளிவாகத் தெரிகின்றது. என வவுனியா மாவட்ட தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான வைத்தியக் கலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் மக்கள் வாழ்விடம் மற்றும் வாழ்வாதார நிலங்கள் தற்போது வனவளத் திணைக்களத்தின் ஆளுகையில் இருந்து அவற்றினை விடுவிக்குமாறு வனவளத் திணைக்களத்திடம் கோரப்பட்ட நிலங்கள் 

தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் தலமையில் கடந்த 26ம் திகதி ஜனாதிபதி மாளிகையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் இதில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் 7 மாவட்ட அரச அதிபர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இதன் பிரகாரம் 7 மாவட்ட அரச அதிபர்களும் காணி , 

மீள்குடியேற்றம் , வனவளம் , வனஜீவராசிகள் , விவசாய அமைச்சுக்களின் செயலாளர்களும் கலந்துகொண்டனர். எனவே இது ஓர் மிக முக்கியமான கலந்துரையாடல் கடந்த ஏப்பிரல் மாதம்  கூட்டமைப்பின் தலைவர்கள் ஜனாதிபதி , பிரதமரிடம் இது தொடர்பில் ஓர கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கமைய இடம்பெற்ற சந்திப்பில் மாவட்டங்களில் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதார நிலங்கள் பல வனவளத் திணைக்களத்தினால் எல்லைக் கற்கற்கள இடப்பட்டமையினால் அந்த நிலத்திற்கு மக்கள் போகமுடியாதவாறும் மேலும்  பல மக்களின் வாழ்விடங்களும் இவ்வாறு குறித்த 

திணைக்களங்கள் அபகரித்துள்ள நிலையிலேயே கானப்படுகின்றது. இதேபோல் பல  இடங்களில் மக்களிற்கான ஒரேயொரு வாழ்விடத்தையும் வனவளத் திணைக்களம்  ஆக்கிரமித்துள்ளதனால் மக்கள் உறவுகளின் காணிகளில் பெரும் நெருக்கடியுடனேயே வாழ்கின்றனர். 

இதில்  வவுனியா வடக்கு , வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை அதேபோல் செட்டிக்குளம் என சகல பிரதேச செயலாளர் பிரிவிலும் இவ்வாறு மக்களின் நிலம் திணைக்கள அபகரிப்பிற்குள் உள்ள நிலமையை சுட்டிக்காட்டி அவற்றினை விடுவிக்க வேண்டும் .

 எனவும் இனி வரும் காலத்தில் எல்லைக் கற்கள் நாட்டுவதானால் பிரதேச செயலாளர்களின் அனுமதி இன்றி நாட்டவே முடியாது. எனவும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தீர்மானிக்கப்பட்டது. 

அது மட்டுமன்றி மாவட்டத்தில் பல ஆயிரம் கால்நடைகளாக உள்ளபோதிலும் மேச்சல் தரைகள் கிடையாது . அதற்கான நிலங்களை விடுவித்து தர வேண்டும் .்எனவும் தீர்மானிக்கப்பட்டது. 

இந்த நிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வவுனியா மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தின் ஆழுகையில் உள்ள நிலத்தில் 75 ஏக்கர் நிலம் மட்டுமே கோரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது 

எனில் இங்கே அரச இயந்திரம் எவ்வாறு செயல்படுகின்றது. இந்த தவறிற்கு யார் பொறுப்பு கூறுவது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிற்கு மாவட்டத்தில் உள்ள வனவளத் திணைக்கள அதிகாரி ஏன் வாரார்

அவ்வாறு வருபை தருபவர் ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் மேற்கொள்ளும் தீர்மானங்களை தமது தலமை அலுவலகத்திற்குகூட தெரிவிப்பது இல்லாத நிலமையே இடம்பெற்றது என்பது தற்போது தெளிவாகின்றது. 

இந்த நிலமையே எமது இனத்திற்கும் மாவட்டத்திற்கும் சாபக்கேடாகவுள்ளது. வவுனியா மாவட்டத்தில் ஒரு இடத்தில் மட்டும் ஆயிரத்து 150 ஏக்கர் நிலம் மாணிக்கப் பண்ணையாக இருந்த்து இதேபோல் 13 இடங்களில் அதிக நிலம் திணைக்களவசம்  உள்ளது.  

எனவே இனியாவது உடனடியாக மாவட்டச் செயலகம் முழுமையான தகவல்களை திணைக்களத்திற்கு வழங்கி மக்களின் நிலம் மக்களிற்கு கிடைக்க ஆவண செய்ய வேண்டும். என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு