வடகிழக்கு மாகாணங்களில் 1000 ஏக்கர் நிலத்தை கூட விடுவிக்க வனவளத் திணைக்களம் மறுப்பு..

ஆசிரியர் - Editor I
வடகிழக்கு மாகாணங்களில் 1000 ஏக்கர் நிலத்தை கூட விடுவிக்க வனவளத் திணைக்களம் மறுப்பு..

வடக்கு கிழக்கு மாகாணத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் மக்கள் பயன்பாட்டு நிலத்தை அபகரித்துள்ள வனவளத் திணைக்களம் அதில் ஓரு ஆயிரம் நிலத்தையேனும் விடுவிப்பதற்கு  இணங்க மறுத்துவிட்டது.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் மக்கள் வாழ்விடம் மற்றும் வாழ்வாதார நிலங்கள் தற்போது வனவளத் திணைக்களத்தின் ஆளுகையில் இருந்து அவற்றினை விடுவிக்குமாறு வனவளத் திணைக்களத்திடம் 

கோரப்பட்ட நிலங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் தலமையில் நேற்றைய தினம் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இதில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் 7 மாவட்ட அரச அதிபர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இதன் பிரகாரம் 7 மாவட்ட அரச அதிபர்களும் காணி , 

மீள்குடியேற்றம் , வனவளம் , வனஜீவராசிகள் , விவசாய அமைச்சுக்களின் செயலாளர்களும் கலந்துகொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் அதிக நிலமாக திருகோணமலை மாவட்டத்தில் சுகுணாவதி தேசிய பூங்காவிற்காக வர்த்தகமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள 25 

ஆயிரத்து 400 ஏக்கரும் சேருவிலப் பகுதியில் உள்ள 10 ஆயிரத்து 200 ஏக்கர் உள்ளிட்ட நிலங்கள் 1956ம் ஆண்டு காணி அனுமதிப்பந்திரங்கள் வழங்கப்பட்ட பகுதிகளை ஆக்கிரமித்தே தற்போது வனவளத் திணைக்களம் எல்லைக் கற்கள் நாட்டுகின்றனர்.

 அதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களின் பாரம்பரிய கிராமங்களில் ஒன்றான குமுழமுனை கிழக்கின் வித்தக குளத்தின் கீழேயுள்ள 835 ஏக்கர் நிலம்  , 

அதேபோல் குறுந்தூர் குளத்தின் 175 ஏக்கர் , அதேபோன்று புதுக்குடியிருப்பு மைதானத்தின் 5 ஏக்கர் உட்பட சுமார் ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் கோரப்பட்டது.

இதேபோன்று மன்னார் மாவட்டத்தில் கொண்டச்சிப் பிரதேசத்தின் நிலமும் வவுனியா மாவட்டத்தில் இரு பிரதேசங்களில் 65 ஏக்கர் நிலமும் கிளிநொச்சி மாவட்டத்தில் 90 ஏக்கரும் கோரப்பட்டிருந்த்து. 

இதேநேரம் மாவட்டங்களில் கோரும் தொகையும் ஒருங கிணைப்புக் குழுக்கூட்டங்களில் தீர.மானமாக கோரப்பட்ட தொகைகள் இதனைவிட பன்மடங்கு ஆனாலும் இங்கே மிகச் சொற்பமே கான்பிக்கப்படுவதாக கூறப்பட்டது.  

மாவட்டத்தின் தொழில் நுட்பக் குழு அறிக்கை சமர்ப்பித்த நிலங்கள் மட்டுமே இவை என வனவளத் திணைக்களத்தால்  கூறப்பட்டது. 

இதேநேரம் ஒவ்வொரு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் தீர்மானங்கள் நிறைவேற்றும்போது வனவளத் திணைக்கள அதிகாரிகள் இருக்கின்றனர்.அவ்வாறானால் அவர்கள் 

ஏன் தலமைப் பணிமனைக்கும் அமைச்சிற்கும. அறிக்கை இடுவதில்லை எனவும் கோரப்பட்டது. அத்துடன் பல இடங்களிலும் மாவட்ட நிர்வாகம் உள்ளூர். அரசியல்வாதிகளிற்கு தெரியாது திடீர் திடீரென நிலங்களக வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம்

 என்பன நிலத்தை கையகப்படுத்தி வர்த்தகமானி அறிவித்தல் வெளியிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இவற்றிற்கு பதிலளித்த  திணைக்கள அதிகாரிகள்  எந்த நிலமும் உள்ளூர் கலந்துரையாடல் இன்றி வர்த்தகமானி அறிவித்தல் பிரசுரிக்கவில்லை 

எனவும் தற்போதும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலங்களிற்கு சூழல் தாக்கம் பற்றிய ஆய்வு அறிக்கைகள் கிடைத்த பின்பே விடுவிப்பதற்கான உத்தியோகபூர்வமான அறிவித்தல் தரமுடியும்  எனப் பதிலளித்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு