200மில்லியன் உதவி திட்டம் 100மில்லியனாக குறைக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
200மில்லியன் உதவி திட்டம் 100மில்லியனாக குறைக்கப்பட்டது..

பிரதேச செயலகங்கள் ஒவ்வொன்றிற்கும் 200 மில்லியன் ரூபா நிதியில் பிரதம மந்திரியின் அமைச்சினால் முன்னெடுக்க திட்டமிடப்பட்ட  கிராம அபிவிருத்திக்கான வேலைத் திட்டம் 100 மில்லியனாக மாற்றப்பட்டதாக நேற்றைய தினம் மாவட்டச் செயலகங்களிற்கு பிரதம மந்திரியின் செயலாளரினால் எழுத்தில் அறிவிக்கப்பட்டது. 

இலங்கையின் 330 பிரதேச செயலாளர் பிரிவிலும் தலா 200 மில்லியன்  ரூபாவில்  12 வகையான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என கிராம மேம்பாட்டுத் திட்டங்களிற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் இதற்கான கலந்துரையாடல் ஒன்று கடந்த யூன் மாதம் 28ம் திகதி திறைசேரியிலும்  இடம்பெற்றது. 

இந்த நிலையில் குறித்த நிதிக்குரிய திட்டங்களை முன்னெடுக்கும் வகையில்  பிரதேச செயலகம் மற்றும் மாவட்டச் செயலாளர்  ஆகியோர்  திட்டத்தை நடைமுறைப்படுத்தும்  நோக்கில் திட்டங்கள் தயார் செய்யப்பட்டு வந்தன.

இவ்வாறு 200 மில்லியன் ரூபாவிற்கான திட்டங்கள் தயார் செய்யப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் பிரதமரின் செயலாளர் ஒப்பமிட்டு குறித்த நிதியானது பிரதேச செயலகங்களிற்கு தலா 100 மில்லியன் ரூபா மட்டுமே அனுமதிக்கப்படும் . என எழுத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு