30 வருடங்களின் பின் புதுப்பொலிவு பெறப்போகும் மயிலிட்டி துறைமுகம்..
யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகம் சுமார் 200 மில்லியன் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் புனரமைப்பு செய்யப்படவுள்ளது இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்துடன் இணைந்து கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சினால் குறித்த அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மயிலிட்டி துறைமுகத்தை ஆழப்படுத்துதல் மீன்பிடி படகுகளுக்கான எரி பொருள் நிரப்பு நிலையம் அமைத்தல், மீனவர்களுக்கான மலசலகூடம் மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்
உள்ளிட்ட அபிவிருத்தி பணிகளே ஆரம்பகட்டமாக அங்கு முன்னெடுக்கப்படவுள்ளது. அடுத்து மீனைக் களஞ்சியப்படுத்துவதற்கான குளிர்சாதன வசதிகள் என்பன செய்யப்படவுள்ளன.
கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட அதிகாரிகள் கடந்த ஜுன் மாதம் சென்று பார்வையிட்டனர்.
இதன்போது தெல்லிப்பளை பிரதேச செயலாளர் வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன் மற்றும் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள பணிப்பாளர் ஆகியோர் சென்று இந்த அபிவிருத்தி தொடர்பில் ஆராய்ந்திருந்தனர்.
இதேவேளை மயிலிட்டி துறைகம் கடந்த ஆட்சியில் விடுவிக்கப்படாது என கூறப்பட்ட நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர்
யூலை 3 ஆம் திகதி 2017 ஆம் ஆண்டு இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றி:- நிருஜன் செல்வநாயகம்..