தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா!
வரலாற்றுப் புகழ் பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா அடுத்தமாதம் 11ஆம் திகதி ( 11/08/2018) செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து 15 தினங்கள் திருவிழா நடைபெறும். 25/08/2018 சனிக்கிழமை தேர் திருவிழாவும் 26/08/2018 ஞாயிற்றுக்கிழமை தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளது என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.