நிதி கிடைத்தவுடன் 522 ஏக்கர் நிலப்பரப்பு வடக்கில் விடுவிக்கப்படும்- இராணுவ பேச்சாளர்.

ஆசிரியர் - Editor I
நிதி கிடைத்தவுடன் 522 ஏக்கர் நிலப்பரப்பு வடக்கில் விடுவிக்கப்படும்- இராணுவ பேச்சாளர்.

இராணுவ முகாம்களின் உட்கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கம் கிடைக்கப்பெற்ற பின்னர் பாதுகாப்பு மீளாய்வு செய்யப்பட்ட காணிகளை விடுவிப்பதில் சிக்கல் இருக்காது என இராணுவம் அறிவித்துள்ளது. 

இது குறித்த இராணுவப் பேச்சாளர் சுமித் அத்தப்பத்து   தெரிவித்தார். 

வடக்கில் 522 ஏக்கர் நிலப்பரப்பினை விடுவிக்க தீர்மானித்திருப்பதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்த போதும் இன்னும் அந்த காலம் தீர்மானிக்கப்படவில்லை. 

விடுவிக்கப்படவுள்ள காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாம்களின் கட்டமைப்புக்கான இடமாற்றம் செய்வதற்கான நிதியை மீள்குடியேற்ற துறை அமைச்சு வழங்கவேண்டும். 

குறித்த நிதியளிப்பு   பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கப்பட்ட பின்னர் அந்த காணிகள் பொதுமக்களுக்கு விடுவிக்கப்படும் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு