மக்களின் காணிகளுக்கு பாதிப்பில்லாமல் பலாலி விமான நிலையம் புனரமைக்கப்படும்..
இந்தியாவிற்ம் பலாலிக்கும் இடையிலான விமான சேவையை விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா மக்களது காணிகளுக்கு பாதிப்ப ஏற்படாத வகையில் விமான நிலைய அபிவிருத்தி நடைபெறுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய குழுவொன்று அமைக்கப்பட்டு ஆராய்ந்து பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் இதே போன்று மட்டக்களப்பிலும் விமான
நிலையமொன்றை அபிவிருத்தி செய்வது குறித்தும் ஆராய்ந்துள்ளதாகவும் மாவை சேனாதிராசா குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலைய அபிவிருத்தி மற்றும் விமான சேவையை ஆரம்பித்தல் குறித்து கூட்டமைப்பிற்கும் இந்தியத்துவர் மற்றும் அரசிற்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருக்கின்றது.
அக் கலந்துரையாடலின் போது பல்வேறு விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டு அவை குறித்து சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டிருக்கின்றன.
அதாவது பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்தி நிர்மாணிப்பதுடன் விரைவில் இந்தியாவிற்கும் பலாலிக்குமிடையிலான விமான சேவையை ஆரம்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்திய அரசினால் அந்த விமான நிலையத்தை மறுசீரமைத்து விமான சேவையை ஆரம்பிப்பதற்கும் விசேட குழுவொன்றை உருவாக்கப்படவுள்ளது.
அந்தக் குழுவானது தொழில்நுட்பவியியலாளர்களை நியமித்து மக்களது நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் இருக்கின்ற விமான நிலையத்தின் அளவு அதாவது ஓடுபாதை போதுமானதென்றும் அதற்கமைய விமான சேவையை முதலில்
ஆரம்பிப்பதென்றும் அதனைத் தொடர்ந்து அபிவிருத்தி வேலைகைள முன்னெடுப்பதற்கம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விமான சேவையை ஆரம்பிப்பது மற்றும் அபிவிருத்தி செய்வது தொடர்பில் இந்திய, இலங்கை அரசுகள் இறுதித் தீர்மானங்களை எடுக்கவுள்ளனர்.
அத்தோடு இவை குறித்து ஆராய்வதற்கு அமைக்கப்படும் குழுவினர் தொடர்ந்து தமது நடவடிக்கைகளை முன்னெடுபார்கள்.
இதற்கு மேலதிகமாக கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பிலும் ஒரு விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வது பற்றியும் பேசப்பட்டுள்ளது.
ஆகவே இவையனைத்தும் வெற்றிகரமான நடைபெறுமென்று நம்புவதாகவும் மாவை சேனாதிராசா மேலும் தெரிவித்தார்.