யாழ்ப்பாணத்தில் மீண்டும் ( ஒலிச் சீர் செய்கை செய்யப்பட்ட) உம்மாண்டி திரைக்காட்சி!

ஆசிரியர் - Admin
யாழ்ப்பாணத்தில் மீண்டும் ( ஒலிச் சீர் செய்கை செய்யப்பட்ட) உம்மாண்டி திரைக்காட்சி!

ஒலிச் சீர் செய்கை செய்யப்பட்ட உம்மாண்டி ஈழத் திரைப்படம் யாழ்ப்பாணத்தில் உள்ள சில திரையரங்குகளில் காண்பிக்கப்படவுள்ளதாக அப் படத்தின் இயக்குனர் மதி சுதா அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ராஜா திரையரங்கில் வெளியிடப்பட்டிருந்த உம்மாண்டி திரைப்படம் அதன் பின் ஏற்பட்ட விநியோகச் சிக்கல்களால் திரையிடல் தாமதமாகியதாகவும் அத்துடன் பலரால் முன் வைக்கப்பட்ட ஒலித் தெளிவின்மையைக் கருத்தில் கொண்டு முக்கிய பாத்திரங்களின் குரல் பதிவு மீளச் செய்யப்பட்டு மீண்டும் திரையிடப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் மாதம் (அடுத்த மாதம்) 4 ம் திகதி பிற்பகல் 6.30 மணிக்கு உடுப்பிட்டியில் உள்ள நிமலேந்திரா திரையரங்கிலும், மறு நாள் 5 ம் திகதி பிற்பகல் 4.30 மணிக்கு பருத்தித்துறையில் உள்ள S.S திரையரங்கிலும் உம்மாண்டி திரைப்படம் திரையிடப்படுகிறது.

தயாரிப்பாளரின் சுய விநியோகம் என்பதால் திரையரங்கு வாடகைக்கு பெறப்பட்டே திரையிடப்படுவதால் குறிப்பிட்ட காட்சிகள் மட்டுமே திரையிடப்படும் என்றும் மதிசுதா கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு