SuperTopAds

நீதபதி இளஞ்செயழியனை காப்பாற்றி உயிரைவிட்ட ஹேமச்சந்திரவின் 1ம் ஆண்டு நினைவு நாள்..

ஆசிரியர் - Editor I
நீதபதி இளஞ்செயழியனை காப்பாற்றி உயிரைவிட்ட ஹேமச்சந்திரவின் 1ம் ஆண்டு நினைவு நாள்..

மறைந்த மெய்ப்பாதுகாவலர் உப பொலிஸ் பரிசோதகர் ஹேமாவகே சரத் ஹேமச்சந்திரவின் முதலாம் ஆண்டு் நினைவு தினமான இன்று அவரது நினைவிடத்தில் 

மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அஞ்சலி செலுத்தினார்.

மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்பாதுகாவலர் சார்ஜன்ட் ஹேமச்சந்திர, கடந்த ஆண்டு ஜூலை 22ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

நீதிபதியின் காருக்கு பாதுகாப்பாகச் சென்ற போது,  வழிமறித்த ஒருவர்,  மெய்ப்பாதுகாவலர் ஹேமச்சந்திரவின் துப்பாக்கியைப் பறித்து  அவர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தினார். 

நல்லூர் ஆலய சூழலில் மாலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. 

அத்துடன் மற்றொரு மெய்பாதுகாவலரும் படுகாயமடைந்தார்.நீதிபதி முன்னிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

சம்பவத்தில்  படுகாயமடைந்த மெய்ப்பாதுகாவலர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

எனினும் பின்னிரவு 11 மணியளவில் சார்ஜன்ட் ஹேமச்சந்திர சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். அவர் உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்த்தப்பட்டார்.

மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராக  ஹேமச்சந்திர 15 வருடமாக கடமையாற்றியவர்.

உயிரிழந்த பொலிஸ் அதிகாரி சிலாபத்தை சேர்ந்தவர். அவருக்கு ஒரு மகளும் ஒரு ஆண் மகனும் உள்ளனர். அவர்கள் இருவரையும் நீதிபதி தத்தெடுத்திருந்தார்.

மறைந்த மெய்ப்பாதுகாவலர் உப பொலிஸ் பரிசோதகர் ஹேமாவகே சரத் ஹேமச்சந்திரவின் முதலாம் ஆண்டு் நினைவு தினமான இன்று அவரது நினைவிடத்தில் 

மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அஞ்சலி செலுத்தினார்.

அத்துடன் ஹேமச்சந்திரவின்  குடும்பத்தினருடன் இணைந்து அவர்களது இல்லத்தில் ஹேமச்சந்திரவின் உருவப்படத்துக்கு தீபமேற்றி நீதிபதி அஞ்சலி செலுத்தினார்.