SuperTopAds

தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் இருந்த வசதிகள்கூட இப்போது இல்லை..

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் இருந்த வசதிகள்கூட இப்போது இல்லை..

விடுதலைப்புலிகள் காலத்திலிருந்த வசதிகள் கூட தற்போதுநெடுங்கேணி ஆதாரவைத்தியசாலையில் இல்லையென  வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் து.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

யுத்தத்திற்குப் பின்னர் பல்லாயிரக்கணக்கான மக்கள் செறிந்து வாழும் பகுதியா  வவுனியா வடக்கு பகுதி காணப்படுகின்றது ஆனால் இங்கு நெடுங்கேணி ஆதார வைத்தியசாலை மாத்திரமே எல்லா கிராமங்களையும் மையப்படுத்திக் காணப்படுகின்றது. 

 ஒவ்வொரு நாளும் நூற்றுக்கனக்கான மக்கள் இந்த வைத்தியசாலையை நாடி வருகின்றனர். அவர்களுக்கு சரியாக வைத்தியரால் இங்கு வைத்து குணப்படுத்த முடியாமல் உடனே வவுனியா பொது வைத்தியசாலைக்கு ஏற்றும் நிலை காணப்படுகின்றது. 

சில சந்தர்ப்பங்களில் நஞ்சரிந்தி,விபத்துக்கள், போன்ற காரணங்களால் வருபவர்கள் பல மணிநேரம் காக்க வைத்தே வவுனியா பொது வைத்திய சாலைக்கு ஏற்றும் நிலை இருக்கின்றது.இதனால் சிலர் இடையில்  இறந்த சந்தர்ப்பங்களும் உண்டு.

இங்கு ஒழுங்கான முறையில் நோயாளர்கள் கவனிக்கப்படுவதில்லை, நோயாளர்களை கவனிப்பதற்கு எந்த வசதிகளும் இல்லை, வைத்தியர் சரியான முறையில் நோயாளர்களை அணுகுவதில்லை , எறும்பு கடித்து வந்தாலும் வவுனியா பொது வைத்திய சாலைக்கே ஏற்றுகின்ற நிலை காணப்படுகின்றது.

விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் இந்த வைத்தியசாலை பல வசதிகளோடு இயங்கி வந்தது எந்த குறைபாடுகளும் இருக்க வில்லை ஆனால் இன்று ஒரு வசதிகளும் இல்லாத நிலையில் இயங்கி வருகின்றமை ஒரு கவலைக்குறிய விடயமாக காணப்படுகின்றது என்றார்.