காணாமல்போனவா்கள் தொடா்பான அலுவலகமே நடைமுறை சாத்தியமானது.. என்கிறாா் நா.உ. எம்.ஏ.சுமந்திரன்..

ஆசிரியர் - Editor I
காணாமல்போனவா்கள் தொடா்பான அலுவலகமே நடைமுறை சாத்தியமானது.. என்கிறாா் நா.உ. எம்.ஏ.சுமந்திரன்..

காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் அமர்வுகளில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் பெருமளவில் பங்கெடுத்திருக்கின்றார்கள். அதேபோல் சில காணாமல்போனவர்களின் உறவினர்கள் அதனை எதிர்த்து போராட்டங்களை நடாத்தியுள்ளதுடன், பகிஸ்கரிப்பும் செய்துள்ளார்கள். 

அந்த சிலருடைய மன நிலைப்பாட்டை நாங்கள் அறிந்திருக்கின்றோம். ஆனாலும் கூட தற்போதிருக்கும் நிலையில் நடைமுறைச்சாத்தியமானதும், சட்டரீதியானதுமான முறையாக காணாமல் ஆக் கப்பட்டோருக்கான அலுவலகமே இருக்கின்றது. 

மேற்கண்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளாா். காணாமல்போனவர்கள் அலுவலகம் குறித்து நேற்று சாவகச்சேரியில் இடம்பெற்ற நிகழ்வு ஒ ன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு

கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகத்தினை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர் சில இடங்களில் பகிஷ்கரித்திருக்கின்றார்கள். 

ஆனாலும் பெருமளவு உறவுகள் அலுவலகத்தின் அமர்வுகளில் கலந்து கொண்டிருக்கின்றா ர்கள். பகிஷ்கரிக்கிறவர்களின் மனநிலையை நாங்கள் நன்றாகவே உணர்ந்து கொள்கிறோம். ஆனாலும் இப்போதுள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தை 

கையாளுவதற்கு இந்த அலுவலகமே நடைமுறைச்சாத்தியமானது. குhணாமல் ஆக்கப்பட்டவ ர்களின் உறவுகள் கேட்பதுபோல் பட்டியல் கொடுப்பதோ? சில இடங்களை காண்பிப்பதோ சாத்தியமற்றது. 

அதனை நாங்கள் கேட்டாலும் கூட உண்மையை தருவார்கள் என்றோ, உண்மையான இடங்க ளை காண்பிப்பார்கள் என்றோ எந்த உத்தரவாதமும் இல்லை. ஆகவே நடைமுறைச்சாத்திய மானதும், சட்டபூர்வமானதுமான இந்த அலுவலகமே சிறந்தது. 

வடமாகாண அமைச்சர் சபை தொடர்பாக..

வடமாகாண அமைச்சர் சபை குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் மிக தெளிவாக விடயங்க ளை கூறியுள்ளது. அதில் யாருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளது? யாருக் கு அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் உள்ளது? 

என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி முதலமைச்சருக்கே அந்த அதிகாரங்கள் உள்ளது. இது முதலமைச்சருக்கு தெரியாமல் இல்லை. ஆனால் தமக்கு தெரியாததுபோல் பாசாங்கு செய்வதாலேயே இவ்வளவு பிரச்சினைகள் உருவாகியிருக்கின்றன. 

எனவே மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருக்கும் வி டங்களை அவ்வாறே நடைமுறைப்படுத்தினால் சகல பிரச்சினைகளும் தீர்க்கப்படும். 

மாகாணசபை உறுப்பினர் அஸ்மினுக்கு எதிராக அமைச்சர் அனந்தி முறைப்பாடு தொடர்பாக..

மாகாணசபையில் பேச்சு சுதந்திரம் உள்ளமை சட்டரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள விடயம் அங்கு பேசப்படும் விடயங்கள் தொடர்பாக விமர்சிப்பதற்கோ,  அதை குறித்து விசாரிப்பதற்கோ எவருக்கும் அதிகாரம் கிடையாது. 

யாழ்.குடாநாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு தொடர்பாக..

இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்த மாகாணசபைக்கு சட்டம் ஒழுங்கு அதிகாரங்கள் பூரணமாக பகிரப்படவேண்டும். மேலும் இந்த பிரதேசத்தில் பேசப்படும் மொழியை தமது சொந் த மொழியாக கொண்டவர்கள் பொலிஸ் சேவையில் ஈடுபடவேண்டும். 

அவ்வாறு இருந்தால் ம ட்டுமே குற்றங்களை குறைக்க இயலும். இல்லையேல் குற்றங்களை குறைப்பது கஸ்டமானதொரு விடயமாகும். ஆனால் அவ்வாறு எல்லாம் நடப்பதற்காக பார்த்துக் கொண்டிருக்க இயலாது. 

சட்டம் ஒழுங்கு மத்திய அரசாங்கத்தின் கைகளில் இருக்கும் நிலையில் அவர்கள் அத னை சரியாக நடைமுறைப்படுத்தவேண்டும். இந்த விடயம் தொடர்பாக நாங்கள் தொடர்ச்சியா க அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். 

அதனாலேயே சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் இங்கே வந்தார்கள். ஆனாலும் ஒன்றும் முடிந்தபாடில்லை. ஆகவே இந்த விடயம் தொடர்பாக தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்போம். 

பிர தமருடனும் இந்த விடயம் தொடர்பாக நாங்கள் பேசுவோம் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு