SuperTopAds

முல்லைத்தீவில் 43 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி சிகிச்சை பெற்றுள்ளனர்..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவில் 43 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி சிகிச்சை பெற்றுள்ளனர்..

முல்லைத்தீவு- முள்ளியவளை வித்தியானந்தா கல் லூரியில் குளவி கொட்டுக்கு இலக்காகி 43 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 

இன்று காலை பாடசாலை ஆரம்பமான நிலையில் பாடசாலை வளாகத்திற்குள் இருந்த தேன் குளவி கூ டு கலைத்திருக்கிறது.

இதனையடுத்து கூட்டிலிருந்து கலைந்த குளவிகள் மாணவர்களை கொட்டியுள்ளது. இவ்வாறு 43 மாண வர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி சிகச்சை பெற்றுள்ளனர்.

மேலும் ஆசிரியர் ஒருவர் மற்றும் 9 மாணவர்கள் வைத்திய சாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகி ன்றனர்.

இதேவேளை பாடசாலை கட்டடம் மற்றும் பாடசாலை வளகத்தினை அண்டிய மரங்களில் பாரிய தேன்குளவி கூடுகள் காணப்படுவதால் 

மாணவர்களின் கல்வி செயற்பாடு அச்சமான சூழ்நிலையில் தொடர்ந்து வருகின்றார்கள். தொர்ச் சியாக இந்த குளவிகள் பாடசாலை வளாகத்தில் 

காணப்படுவது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தும் குறித்த தேன்குளவிகூடு கட்டுவதை கட்டுப்படுத்த 

முடியவில்லை என பாடசாலை சமூகம் கவலை தெரிவித்துள்ளார்கள்.