சிறு தொழில் முயற்சியாளர்களையும் விட்டுவைக்காத இறைவரி திணைக்களம்..
பெண்களைத் தலமையாக கொண்ட சிறு முயற்சியாளர்களையும் இறை வரி செ லுத்தமாறு கேட்கப்பட்டுள்ளமையினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பெண் தல மைத்துவ குடும்பங்கள் கூறுகின்றன.
வடக்கு மாகாணத்தில் தற்போது சுமார் 50 ஆயிரம் பெண் தலமைத்துவ குடும்பங்கள் வாழும் நிலையில் இவர்கள் தமது வாழ்வா தாரத்திற்காக ஊறுகாய் , வடகம் , மற்றும்
உணவு உற்பத்திகளில் ஈடுபட்டு பெரும் நெருக்கடியின் மத்தியில் வாழ்வாதாரத்தினை முன்கொண்டு செல்கின்றனர். இவ்வாறு மேற்கொள்ளும் குடிசை கைத்தொழிலை ஒத்த முயற்சிக்காக சிலர் சமுர்த்திகளிலும்
மேலும் பலர் வங்கிகளில் சிறு கடனையும் பெற்று தொழிலை மேற்கொள்ளும் நிலையில் அவற்றினை சந்தைப்படுத்த முயற்சிக்கும்போது பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் சோதனை எனத் தெரிவித்து
ஓர் பெயர் சூட்டி அந்த லேபளில் தயாரிப்புத் திகதி மற்றும் முடிவுத் திகதிகள் அச்சிடப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே வி ற்பனை செய்ய முடியும் என கூறியிருந்தனர்.
இதன்காரணமாக சிறு முயற்சியாளர்கள் பொதுச் சுகாதார உத்தியோகத்தரின் பணி ப்புக்கமைய நடவடிக்கை எடுத்தபோது பதிவு செய்யவேண்டும் என பிரதேச செயலகம் கூறியுள்ளது.
அதனையும் செய்த நிலையில் பிரதேச செ யலகங்களில் அந்த விபரங்களை பெற்றுள்ள இறை வரி திணைக்களம் தமக்கு வரி செ
லுத்துமாறுகோரி சிறு தொழில் முயற்சியாள ர்களால பெண் தலமைத்துவ குடும்பங்களுக்கு வரி செலுத்துவதற்கான விபரம் கோரல் பத்திரங்களை அனுப்பி வைந்துள்ளனர். என பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் இறைவரித் திணைக்களத்திடம் தொடர்புகொண்டு கேட்டபோது அந்தவகையான முயற்சியாளர்களிற்கு படிவம் அனுப்புவது கிடையாது. எனப் பதிலளித்தனர்.