SuperTopAds

வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா அவர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன்

ஆசிரியர் - Editor II
வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா அவர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன்

ஈ.பி.டி.பி. கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டக்­ளஸ் தேவா­னந்­தாவை மாகாண சபை­யின் நேற்­றைய அமர்­வில் விமர்­சித்­த­போது சபை­யின் எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா பொங்கி எழுந்­தார். அத்­து­டன் நிற்­காது முதல்­வ­ரை­யும் கடு­மை­யா­கச் சாடி­னார்.

வடக்கு மாகாண சபை­யின் அடுத்­தாண்­டுக்­கான வரவு செல­வுத் திட்­டத்­தின் இரண்­டாம் வாசிப்பு நேற்று நடை­பெற்­றது.

அது தொடர்­பில் முத­ல­மைச்­சர் உரை ஆற்­றி­னார். பின்­னர் எதிர்க்­கட்­சித் தலை­வர் உரை­யாற்­றி­னார். அதில் மாகாண சபை தவ­ற­விட்ட பல விட­யங்­க­ளைச் சுட்­டிக்­காட்டி மேலும் பல குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் முன்­வைத்­தார்.

‘‘அரசு எதை­யும் தர­வில்லை என்று கூறிக்­கொண்டு இருக்­கும் நீங்­கள் அர­சி­டம் எதை­யா­வது பெறு­வ­தற்கு முயற்சி எடுத்­தீர்­களா?’’ என்று தவ­ராசா முதல்­வ­ரி­டம் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தார். அதற்கு தல­மைச்­சர் பதி­ல­ளிக்­கும்­போது ஒரு கட்­டத்­தில் தெரி­வித்­த­தா­வது:

“நீண்ட கால­மாக இலங்கை அர­சு­டன் நெருங்­கிய உறவை வைத்­தி­ருக்­கும் உங்­கள் கட்­சி­யின் செய­லா­ளர் நாய­கம் மக்­க­ளுக்கு என்­னத்­தைச் செய்­தார்’’ என்று கிண்­ட­லா­கப் பதில் கேள்­வி­யெ­ழுப்­பி­னார்.

“உங்­க­ளுக்கு அவரை பற்றி பேச வேண்­டிய தேவை­யும் இல்லை. தகு­தி­யும் இல்லை. அவர் இத்­தனை காலம் இலங்கை அர­சு­டன் இணைந்­தி­ருந்து மக்­க­ளுக்கு ஆற்­றிய சேவை­யில் ஒரு துளி­யைக்­கூட நீங்­கள் செய்­ய­வில்லை. அவ­ரால் எத்­தனை குடும்­பங்­கள் வாழ்­கின்­றன என்­ப­தைப் போய்ப் பாருங்­கள்” என்று சூடா­கவே எழுந்­தார்.