50 அம்புலன்ஸ் வண்டிகளை பிரதமர் ரணில் நாளை கையளிப்பார்..
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள 1990 இலக்க நோயாளர் காவு வண்டிகளை நா ளை யாழ்.வருகைதரும் பிரதமர் ரணில் விக்ர மசிங்க கையளிக்கவுள்ளார்.
வடக்கு மற்றும் ஊவா மாகாணத்திற்கு 1990 இலக்கத்தில் மேற்கொள்ளவுள்ள அவசர நோயாளர் சேவைக்கான 50 நோயாளர் காவு வண்டிகள் நேற்றைய தினம்யாழ்ப்பாணம் எடுத்து வரப்பட்டது.
இந்திய அரசின் நிதி உதவியில் நாளை 21ம் திகதி வடக்கு மற்றும் ஊவா மாகாணத்தில் ஆரம்பிக்கவுள்ள அவசர நோயாளர் காவு வண்டி சேவைக்காக தற்போது 50 நோயாளார் காவு வண்டிகள் எடுத்துவரப்பட்டுள்ளது.
இந்த 50 நோயாளர் காவு வண்டிகளும் தற்போது யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நோயாளர் காவு வண்டி சேவையின் உத்தியோக பூர்வ கையளிப்பு நாளை இடம்பெறவுள்ளது.
இவ்வாறு இரு மாகாணத்திலும் ஆரம்பிக்கும் குறித்த புதிய சேவை ஆரம்ப நிகழ்வில் இலங்கை பிரதமர் நேரடியாக பங்குகொள்ளும் அதேநேரம் இந்தியப் பிரதமர் இணையவழியூடாக உரையாற்றவுள்ளார்.
இவ்வாறு இரு மாகாணத்திற்கான உததியோகபூர்வ நிகழ்வுகளும் யாழில் இடம்மெறுவதனால் இரு மாகாணங்களிற்கும் கையளிக்கும் வண்டிகள் அனைத்தும் யாழ்ப்பாணம் எடுத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.