யாழ்ப்பாணம் வருகிறார் ஞானசார தேரர்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் வருகிறார் ஞானசார தேரர்..

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் நாயகம் ஞானசார தேரர் வருகின்ற வார இறுதியில் யாழ். மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டு வருகின்றார்.

போருக்கு பிந்திய யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகளை செவிமடுப்பதற்காக இவர் நேரில் வருகின்றார் என்று சொல்லப்படுகின்றது. 

குறிப்பாக இம்மாவட்டத்தில் வசிக்க கூடிய தமிழ் பௌத்தர்களை சந்தித்து பேசுவதே இவரின் விஜயத்தின் முக்கிய நோக்கம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

உண்மையில் இவர் இவ்வார இறுதியில் யாழ்ப்பாணம் வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தபோதிலும் இவருக்கு எதிரான வழக்கு காரணமாகவே

 விஜயத்தை அடுத்த வாரத்துக்கு தள்ளி போட்டு உள்ளார் என்று இவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. 

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி மைத்திரி குணரட்ண தலைமையிலான உயர்மட்ட குழு கடந்த மாதம் யாழ். மாவட்டத்துக்கு 

நேரில் வந்து மக்களின் குறைகளை செவிமடுத்து சென்றது. இந்நிலையில் ஞானசார தேரரை சில நாட்களுக்கு முன்னர் மைத்திரி குணரட்ண சந்தித்தபோது யாழ்ப்பாண மக்களின் அவல வாழ்க்கை குறித்து பிரஸ்தாபித்து இருக்கின்றார். 

வெறுமனே விமர்சித்து கொண்டு இருப்பதால் எவ்வித பயனும் கிடையாது, யாழ்ப்பாண மக்களின் அவலங்களை நேரில் சென்று பாருங்கள் என்று 

தேரருக்கு இவர் எடுத்து சொல்லியதை அடுத்தே ஞானசார தேரர் யாழ்ப்பாணம் வருவதற்கான தீர்மானத்தை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு