அடகு வைக்கப்பட்ட நகை மோசடி, வாடிக்கையாளர் முறைப்பாடு..

ஆசிரியர் - Editor I
அடகு வைக்கப்பட்ட நகை மோசடி, வாடிக்கையாளர் முறைப்பாடு..

மக்கள் வங்கியின் பல்கலைக்கழகக் கிளை, திருநெல்வேலி சேவை நிலையத்தில் இடம்பெற்ற அடகு நகை மோசடி தொடர்பில் தனக்கு நீதிபெற்றுத் தருமாறு கோரி 

வாடிக்கையாளர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் மீதான விசாரணைகள் இன்று 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது.

2012 ஆம் ஆண்டு ஜூலை மாதமளவில் மக்கள் வங்கியின் பல்கலைக்கழகக் கிளை, திருநெல்வேலி சேவை நிலையத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகளை வங்கி அதிகாரி ஒருவர் மோசடி 

செய்தமை கண்டுபிடிக்கப்பட்டு, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுமிருந்தார். அந்த மோசடியின் போது நகையைப் பறிகொடுத்த வாடிக்கையாளர் ஒருவர் தனது நகைகளை மீட்டுத் 

தருமாறு வங்கியின் முகாமைத்துவத்திடம் முறைப்பாடு செய்திருந்த போதும், நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை.

மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் சுதந்திரமாக நடமாட, நகைககளைப் பறிகொடுத்தவர்கள் ஆறு ஆண்டுகளுக்கு மேலாகப் பரிகாரமின்றி இருக்கின்றனர்.

இந்த நிலையில் தமது நகைகளை மீட்டுத்தருமாறும், நட்ட ஈடு பெற்றுத் தருமாறும் கோரி, இலங்கையில் வங்கிகள் மற்றும் நிதி 

நிறுவனங்கள் மீதான அதியுச்ச அதிகாரம் கொண்ட நிதியியல் ஒம்புட்ஸ்மன் அலுவலகத்தில் 2014 ஆம் ஆண்டு முறைப்பாடு செய்யப்பட்டு, விசாரணைகள் இடம்பெற்றன. 

விசாரணைகளின் முடிவில் முறைப்பாட்டாளரின் நகையை மீளளிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஒம்புடஸ்மன் பரிந்துரைத்த போதிலும், நகையை மீளளிப்பதற்கு வங்கி நடவடிக்கை எடுக்காத 

நிலையில், மேன்முறையீடு செய்யப்படதனால் மீண்டும் இன்று ஒம்புட்ஸ்மன் அலுவலகத்தில் விசாரணை இடம்பெறவிருக்கின்றது.

அடகு வைக்கப்பட்ட நகையை ஆறு வருடங்களாக மீளப்பெற முடியாமல் இருப்பதற்கு எதிராகவும், பொருத்தமான நஷ்ட ஈட்டைப் பெற்றுத் தருமாறும் முறைப்பாட்டுக் காரரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு