SuperTopAds

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை வழக்கு:துப்பாக்கிதாரியின் காதலி கைது!

ஆசிரியர் - Admin
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை வழக்கு:துப்பாக்கிதாரியின் காதலி கைது!

கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்ய வந்த துப்பாக்கிதாரியின் காதலி என்று கூறப்படும் பெண் ஒருவரை மஹரகம பொலிசார் கைது செய்துள்ளனர்.

பிரதி பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பனவின் அறிவுறுத்தலின் பேரில் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவர் தற்போது கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்த பின்னர், துப்பாக்கிதாரி தனது காதலியுடன் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வந்ததாக தற்போது தெரியவந்துள்ளது.

அதற்காக, குறித்த பெண்ணை நீர்கொழும்பு பகுதிக்கு அழைத்துச் செல்ல நபர் ஒருவர் மஹரகம பகுதிக்கு வந்துள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரையும் கைது செய்த பொலிசார், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப்பிரிவிடம் அவரை ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.