SuperTopAds

ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் தலைகீழாக கவிழ்ந்த டெல்டா விமானம்- 17 பேர் காயம்!

ஆசிரியர் - Admin
ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் தலைகீழாக கவிழ்ந்த டெல்டா விமானம்- 17 பேர் காயம்!

கனடாவின் ரொறன்ரோ பியர்சன் அனைத்துலக விமான நிலையத்தில் Delta Air Lines விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 17 பேர் காயமடைந்துள்ளனர். 

அமெரிக்காவின் மினியாபொலிஸ் (Minneapolis) நகரிலிருந்து புறப்பட்ட விமானம், பனி படர்ந்த ஓடுபாதையில் தலைகீழாகக் கவிழ்ந்தது விபத்து ஏற்பட்டது. அந்த விமானத்தில் 80 பேர் இருந்தனர்.

இன்று பிற்பகல் 3.45 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை அடுத்து, சம்பவ இடத்துக்குத் தீயணைப்பு, மீட்புப் பணிக் குழு, ஹெலிகாப்டர்கள், மருத்துவ உதவி வாகனங்கள் போன்றவை அனுப்பப்பட்டுள்ளன. விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.சம்பவம் குறித்த விசாரணை தொடங்கியுள்ளது.