SuperTopAds

திருகோணமலை மீனவர்கள் 24 பேருக்கு முல்லைத்தீவில் விளக்கமறியல்..

ஆசிரியர் - Editor I
திருகோணமலை மீனவர்கள் 24 பேருக்கு முல்லைத்தீவில் விளக்கமறியல்..

முல்லைத்தீவு-புலிபாய்ந்தகல் பகுதியில் சட்ட த்திற்கு மாறாக சுருக்குவலை பயன்படுத்தி மீன்பிடிக்க தயாரான 24 மீனவர்களையும், 5 ப டகுகளையும் 30ம் திகதி வரை விளக்கமறிய லில் வைக்குமாறு முல்லைத்தீவு நீதிவான் நீ திமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முல்லைத்தீவு கடலில் அனுமதி இன்றி சுருக்குவலை பயன்படுத்திய திருகோணமலையை சேர்ந்த 5 படகுகளை மாவட்ட நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றி நீதிமன்றில் முற்படுத்தினர். 

இதில்  திருகோணமலைசை சேர்ந்த 5 படகுகளும்  அனுமதி அற்ற  இதனால் 5 சுருக்கு வலைகளும்   24 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 24 மீனவர்பளும் அனுமதி இன்றி சுருக்கு வலை பயன்படுத்திய குற்றச் சாட்டின்  பேரில் நேற்றைய தினம் முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர் . 

குறித்த வழக்கை ஆராய்ந்த மாவட்ட நீதிபதி லெனின்குமார் சந்தேக நபர்கள் 24 பேரையும் எதிர்வரும் 30ம் திகதிவரையில் விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதேநேரம் மாத்தளன் பகுதியில் சட்ட விரோத மீன்பிடி முறையான டைனமற் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 450 கிலோ மீனையும் நேற்று முன்தினம் அதிகாரிகள் கைப்பற்றியதோடு குறித்த மீன்கள் தொடர்பில் நேற்று நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்தனர்.  

இதனை ஆராய்ந்த நீதிபதி குறித்த மீன்களை அழிக்குமாறு உத்தரவிட்டார்.