SuperTopAds

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் உயர்மட்டக் கூட்டம்!

ஆசிரியர் - Admin
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் உயர்மட்டக் கூட்டம்!

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் உயர்மட்டக் கூட்டம் வவுனியா கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்றது.

கடந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் முதல் தடவையாக கூடியுள்ள ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை சந்திக்கும் விதம் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கலந்துரையாடலில் பராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், கோ.கருணாகரம், எம்.கே.சிவாஜிலிங்கம், ந.சிறிகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்களான ப.வேந்தன், பவான் முதலானோர் கலந்துகொண்டிருந்தனர்.