SuperTopAds

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் : இன்றைய வானிலை முன்னறிவிப்பு

ஆசிரியர் - Admin
இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் : இன்றைய வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (05) மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவக்கூடும் என திணைக்களம் குறிப்பிடுகிறது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.