SuperTopAds

விபத்தில் சிறுமியும் தாயும் உயிரிழந்த சம்பவம்; இதனைக் கண்டித்து சடலம் முன் போராட்டம்

ஆசிரியர் - Admin
விபத்தில் சிறுமியும் தாயும் உயிரிழந்த சம்பவம்; இதனைக் கண்டித்து சடலம் முன் போராட்டம்

கடந்த 25ஆம் திகதி நத்தார் பண்டிகை தினத்தன்று கிளிநொச்சி நகரப் பகுதியில் டிப்பர் விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அச்சிறுமியின் தாயார் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று(02) சிகிச்சை பலனின்றி தாயும் உயிரிழந்துள்ளமை அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனை கண்டித்து இதுபோன்ற செயல்கள் இனிரும் காலங்களிலும் இடம்பெறாதிருக்க பொலிஸாரின் செயற்பாடுகள் உரிய முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்து இன்று(03) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை இறந்த பெண்ணின் சடலத்தின் முன்பாக முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது‌.