SuperTopAds

மனநலம் பாதிக்கப்பட்ட நபர் காணாமல் போயுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

ஆசிரியர் - Admin
மனநலம் பாதிக்கப்பட்ட நபர் காணாமல் போயுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

கிளிநொச்சி கோணாவில் மத்தியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்று(02) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

அந்த முறைப்பாட்டிக்கு அமைவாக தேடுதல் நடவடிக்கையின் போது கிளிநொச்சி முறிப்பு குளத்தின் தடுப்பு அணையில், காணாமல் போன நபரின் துவிச்சக்கர வண்டியும், அவரது பாதணியும் கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் காணாமல் போனவரை பொதுமக்கள் மற்றும் மீனவர்களும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.