SuperTopAds

ஏர் கனடா விமானம் தீப்பற்றியது!

ஆசிரியர் - Admin
ஏர் கனடா விமானம் தீப்பற்றியது!

ஏர்-கனடா (Air Canada) விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கனடாவின் சென். ஜான்ஸில் இருந்து ஹலிஃபாக்ஸுக்கு 80 பயணிகளுடன் பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.     

குறித்த ஏர் கனடா விமானம் கியர் செயலிழப்பால் ஆபத்தான முறையில் ஹாலிஃபாக்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது, விமானத்தின் இறக்கை ஓடுதளத்தில் உரசி திடீரென தீப்பிடித்ததுள்ளது.

எனினும் அதிஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், ஹாலிஃபாக்ஸ் ஸ்டான்ஃபீல்ட் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.