ஊடகவியலாளரை தாக்கியதாக கைதானவர்களுக்கு பிணை!
கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மு. தமிழ்ச்செல்வனை கடந்த 26ஆம் திகதி தாக்கி கடத்த முற்பட்ட சந்தேக நபர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (30) ஆள் அடையாள அணிவகுப்புக்கு முற்படுத்தப்பட்டனர்.
இதன்போது ஊடகவியலாளரால் சந்தேக நபர்கள் இருவரும் சரியாக அடையாளம் காட்டப்பட்டனர்.
இதனையடுத்து, வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டதை தொடர்ந்து, சந்தேக நபர்கள் இருவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வழக்கு எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு தவணையிடப்பட்டுள்ளது.