இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஷ்வரனின் உரை தொடர்பில் பரந்துபட்ட விசாரணை..

ஆசிரியர் - Editor I
இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஷ்வரனின் உரை தொடர்பில் பரந்துபட்ட விசாரணை..

இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஷ் வரன் தமிழீழ விடுதலை புலிகள் குறித்து ஆற்றிய உரை தொடர்பாகவும் அதன் பின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறிய கருத்துக்கள் குறித்தும் திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பான பொலிஸ் விசாரணை பிரிவு இன்று வடமாகாண முதலமைச்சர் சீ. வி.விக்னேஷ்வரனை விசாரணைக்குட்படுத்தியுள்ளது. 

இன்று காலை 10 மணி தொடக்கம் 11.30 ம ணிவரை சுமார் ஒன்றை மணி நேரம் இந்த விசாரணை இடம்பெற்றது. தமிழீழ விடுதலை புலிகள் வடகிழக்கில் மீள உருவாக்கப்படவேண்டும் எனவும், தமிழீழ விடுதலை புலிகள் இருந்தால் மட்டுமே மக்கள் நின்மதியாக இருக்க முடியும் என கூறியிருந்தார்.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் உள்நாட்டலு வல்கள் அமைச்சர் மற்றும் வெளிநாட்டலுவ ல்கள் அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்விலேயே இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஷ்வரன் மேற்படி உரையினை ஆற்றியிருந்தார். இது தொடர்பிலேயே திட்டமிட்ட குற்றங்களை தடுப்பதற்கான பொலிஸ் பிரிவு இந்த விசாரணைகளை நடாத்தியுள்ளது.

முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனைத் தொடர்ந்து குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் அரச அதிகாரிகளும் வி சாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு