அமெரிக்காவின் THAAD ஏவுகணை தடுப்பை பயன்படுத்திய இஸ்ரேல்: ஹவுதி தாக்குதல் முறியடிப்பு!

ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட ஏவுகணையை இஸ்ரேல் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியுள்ளது. அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட டெர்மினல் ஹை ஆல்டிடியூட் ஏரியா டிஃபென்ஸ் (THAAD) அமைப்பு மூலம் இந்த தடுப்பு நடவடிக்கை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) THAAD பயன்படுத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இஸ்ரேலிய ஊடக வெளியீடுகளின் அறிக்கைகள் மற்றும் பரவலாக பகிரப்பட்ட சமூக ஊடக வீடியோக்கள் அதன் ஈடுபாட்டை வலுவாகக் குறிப்பிடுகின்றன.
அமெரிக்காவால் இஸ்ரேலில் அக்டோபரில் THAAD அமைப்பு நிறுவப்பட்டது, இவை இறுதி கட்டத்தில் ஏவுகணைகளை தடுத்து நிறுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது 870 முதல் 3,000 கிலோமீட்டர் வரை அச்சுறுத்தல்களை கண்டறிந்து தடுத்து நிறுத்தும் திறன் கொண்டது.