கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் வருடாந்த ஒளி விழா
கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் வருடாந்த ஒளி விழா
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் வருடாந்த ஒளி விழா கல்லூரி அதிபர் அருட் சகோதரர் அதிபர் அருட். சகோதரர் S.E.றெஜினோல்ட் FSC தலைமையில் வெள்ளிக்கிழமை(22) சிறப்பாக நடைபெற்றது. கார்மேல் பற்றிமா கொன்மேன்ற் பெண்கள் கல்லூரியில் இருந்து பாரிய கண்கவர் கலாசார அம்சங்கள் அடங்கிய ஊர்வலம் ஆரம்பமாகியது.
கல்லூரியின் 125ஆவது ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் இதுவரை வாணி விழா மற்றும் மீலாதுன் நபி விழா மிகச் சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் அண்மையில் நடைபெற்றதை பலரும் பாராட்டியிருந்தனர்.
அந்த வகையில் இடம் பெற்ற ஒளி விழாவிலும் அங்கு கண் கவர் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் வடக்கத்துக்குரிய அருட்தந்தை ஏ.அகஸ்டின் நவரெத்தினம் அடிகளார் கலந்து சிறப்பித்தார் .மேலும் பல மத பெரியார்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர் .
குறித்த பண்பாடு பாரம்பரியம் மிக்க பெரும் கலைத்துவ ஊர்வலம் நேரடியாக பாத்திமா கல்லூரியை அடைந்த பொழுது அங்கு பாரம்பரிய சம்பிரதாய முறைப்படி கலை நிகழ்ச்சிகள் மேடை ஏறின.பாடசாலையின் மூன்றாம் தவணை இறுதி நாள் என்ற காரணத்தினால் நிகழ்ச்சிகளில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். அவை மேலும் களை கட்டி இருந்தன.