ரஷ்யா மீதான கருத்தை மாற்றிய உலகக் கிண்ண கால்பந்து!

ஆசிரியர் - Editor II
ரஷ்யா மீதான கருத்தை மாற்றிய உலகக் கிண்ண கால்பந்து!

ரஷ்யா மீது சர்வதேச நாடுகள் கொண்டிருந்த கண்ணோட்டத்தை உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் மாற்றியுள்ளதாக ‘பிபா’ தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகளவில் அமெரிக்காவிற்கு நிகரான வல்லரசு நாடாக கருதப்பட்டது சோவியத் யூனியன். அதன் பின்னர், சோவியத் யூனியன் அமைப்பு சிதறி தனிநாடுகளாக உருவெடுத்தது.

செர்னோபில் அணு உலை விபத்துக்கு பின்னர், அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளால் ரஷ்யா நிதிசார்ந்த விவகாரங்களில் சிறிது தள்ளாட்டத்தை எதிர்கொள்ள நேரிட்டது.

பின்னர் உக்ரைன் நாடு உடைந்து கிரிமியா எனும் தனிநாடு உருவாகியது. அதனைத் தொடர்ந்து, சிரிய விவகாரத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவாகவும், அமெரிக்காவின் கருத்துக்கு எதிராகவும் ரஷ்யா செயல்பட்டு வந்ததால், ஐரோப்பிய நாடுகளின் தாக்குதலுக்கு உள்ளானது.

இந்நிலையில், தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருந்த போதிலும் துணிச்சலாகவும், வெற்றிகரமாகவும் உலகக் கிண்ண கால்பந்து தொடரை ரஷ்யா நடத்தி வருகிறது. இன்று இந்த தொடரின் இறுதிப்போட்டி மாஸ்கோ நகரில் நடைபெற உள்ளது. இதில் குரோஷியா-பிரான்ஸ் அணிகள் மோத உள்ளன.

மாஸ்கோ நகரில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் மற்றும் ‘பிபா’ அமைப்பின் தலைவர் கியானி இன்பாண்ட்டினோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது, ரஷ்யா மீதான சர்வதேச நாடுகளின் கண்ணோட்டம் இந்த உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளின் மீது மாறியுள்ளதாக கியானி இன்பாண்ட்டினோ குறிப்பிட்டார்.

அதனை வரவேற்ற புதின், இந்த கால்பந்து போட்டிகள் நமது நாட்டுக்கு பல புதிய நண்பர்களை உருவாக்கி தந்துள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு