தந்தை செல்வா உருவாக்கிய தமிழரசுக் கட்சி பதவிப் போட்டியால் அழியும் நிலையில்...
தந்தை செல்வா உருவாக்கிய தமிழரசு கட்சி இப்போது இல்லை. இப்போது இருப்பவர்கள் பதவி போட்டியால் தமது கட்சியை தாங்களே அழிக்கும் சிறப்பு திறன் கொண்டவர்கள்.
அவர்கள் தொட்பில் பேசுவது வீண் என்று ஜனநாய தமிழ் தேசிய கூட்டணியின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் பா.கஜதீதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தின் பின் ஊடகவியலாளர்களால் அவரிடம் தமிழரசு கட்சியின் மூத்த துணைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழரசு கட்சியை அழியவிடக்கூடாது என்றும்,
தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் இருந்த 90 வீதமானவர்கள் இலங்கை தமிழரசு கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கூறிய விடயம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
முதலில் தமிழரசு கட்சியை உருவாக்கியவர்கள் தந்தை செல்வா, அவரோடு வன்னியசிங்கம், நாகநாதன், அமிர்தலிங்கம் போன்ற மூத்த தலைவர்கள் அக் கட்சியை கட்டி வளர்த்தார்கள். இன்று தமிழரசு கட்சியை அழிவுப்பாதைக்கு கொண்டு சென்றிருப்பது வேறு யாரும் இல்லை.
அது தமிழரசு கட்சியை சார்ந்தவர்கள்தான். இது சி.வி.கே அண்ணருக்கும் தெரியாமல் இருப்பதற்கு வாய்பில்லை. அவருக்கு நன்கு தெரியும்.
அவர் தேர்தலுக்காக பேசுகிற பேச்சுத்தான் இது. தமிழரசு கட் சிக்குள் இருக்ககூடிய சகல குழப்பங்களும் தமிழரசு கட்சிக் கார்களினாலேயே ஏற்படுத்தப்படுத்தப்படுகி ன்றன. அந்த குழப்பங்களுக்கு மிகப் பெரும் காரியாக உள்ளதுதான் அவர்களுக்குள் இருக்கும் பதவி போட்டி.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பங்களிப்போடு தமிழ் மக்கள் மத்தியில் மிகப் பெரும் நம்பிக்கையோடு, எதிர்பார்ப்போடு கட்டியெழுப்பப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை சிறுபிள்ளைத்தனமாக காரணங்களை கூறி கடந்த நடைபெறாத உள்ளுராட்சி மன்றங்களுக்காக தேர்தலுக்காக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக மட்டக்களப்பு மாவட்டத்திலே அவர்கள் நடத்தியிருக்கக் கூடிய மத்திய குழுக் கூட்டத்திலே ஒரு முடிவு எடுக்கப்பட்ட போழுது, இதே சி.வி.கே.சிவஞானம் ஆமோதித்து வழிமொழிந்தார்.
அதற்கு பின்னதாக தமிழரசு கட்சியிலே இத்தனை குழப்பங்கள் வந்து, அக் கட்சியில் இருந்த மிக மூத்தவர்களும், அக் கட்சிக்காக உழைத்திருக்க கூடிய அத்தனை பேரும் ஒரே இரவிலேயே வெளியேற்றப்பட்ட பொது இந்த துணைத் தலைவர் என்று சொல்லப்படுகின்ற சி.வி.கே.சிவஞானம் அதற்குள் இருந்தார். இப்பொழுது அவர் புதிதாக ஏதோ பேசுகின்றார்.
அதில் எந்த உண்மையும் இல்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில், சகல போராளி இயக்கங்களிலும்
இருந்திருக்கக் கூடியவர்கள் உண்மையான தமிழரசு கட்சியினுடைய பாரம்பரியத்தில் இருந்து வந்தவ ர்கள்தான். அதில் எங்களுடைய கட்சியின் தலைவர் தர்மலிங்கள் சித்தாத்தனாக இருந்தாலும் சரி, அல்லது ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் தலைவராக இருந்தாலும் சரி,
அல்லது ரேலோ இயக்கத்தின் தலைவராக இருந்தாலும் சரி எல்லோருமே தமிழரசு கட்சியின் பாரம்பரியத்தில் வந்தவர்கள்தான். சி.வி.கே அண்ணன் அவ்வாறு வராதவராக இருக்கலாம்.
ஆனால் சகல இயக்க போராளி தலைவர்களும் தமிழரசு கட்சியில் பாரம்பரியத்தில் வந்தவர்கள்தான். நான் சொல்லுகின்றமது தந்தை செல்வா மற்றும் அமிர்த லிங்கத்தின் ஆகியோரின் தமிழரசு கட்சியைத்தான்.
இப்போது இருக்கின்ற தமிழரசு கட்சியில் இருக்கின்றவர்கள் ஒட்டுமொத்தமாக தங்களுடைய கட்சியை யே சிதறடிக்கக் கூடியவர்கள். அவர்களைப் பற்றி அதிகம் பேசுவது நேரவிரயத்தைத்தான் ஏற்படுத்தம் என்றார்.