SuperTopAds

மாற்றம்.. மாற்றம்.. என்றார்கள் கண்டது ஒன்றுமில்லை.. ஈ.சரவணபவன்..

ஆசிரியர் - Editor I
மாற்றம்.. மாற்றம்.. என்றார்கள் கண்டது ஒன்றுமில்லை.. ஈ.சரவணபவன்..

மாற்றம்.. மாற்றம்.. என கோஷமிட்டவர்கள் இப்போது மௌனமாக இருக்கின்றனர். மாற்றத்தை விரும்பிய மக்கள் ஏமாற்றத்துடன் நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சன நாயக தமிழரசு வேட்பாளர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் ஆதரவாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,

80 வருடங்களாக நம்பிக்கை நம்பிக்கை என்று ஓடிக் கொண்டிருக்கின்றோம். தற்போதும் நம்பிக்கை என் று வந்து நிற்கின்றோம். மாற்றம் என்று சொன்னார்கள். மாற்றத்தை நம்பி அனைவரும் படையெடுத்தார் கள். மாற்றம் நிகழ்ந்ததா?

இராணுவ முகாம் அகற்றப்படாது என்று சொல்லப்பட்டிருக்கின்றது. இதே அனுரகுமார தேர்தலுக்கு முன் னர் இராணுவ முகாம்கள் பாதுகாப்பு நிலையை கருத்திற்கொண்டு அகற்றப்படும் என தெரிவித்தார். அ து நடக்கவில்லை. 2009க்கு பின்னர் 15 வருடங்களாக

நாங்கள் இன்னமும் இராணுவ அடக்குமுறைக்குள்ளேயே இருக்கின்றோம். யாழ்ப்பாணத்தில் ஐந்து பேரு க்கு ஒரு இராணுவமும் கொழும்பில் 150 பேருக்கு ஒரு இராணுவமும் நிலை கொண்டிருக்கின்றது. எந்த ஒ ரு நாட்டிலும் பொதுவாக இராணுவங்கள் அதிகமாக நிலை கொண்டிருக்கும் இடம்

தலைநகரமாகவே இருக்கும் ஆனால் இங்கு அப்படியல்ல. இந்த நிலைமை இனி வரும் காலங்களில் மாறி யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு ஒரு இராணுவம் என்ற நிலை உருவாகும். இது வீண் விடய ம் இவற்றை நான் மாற்றுவேன் என சொன்னவர்

ஜனாதிபதியாக வந்த பின்னர் தற்போது மௌனம் காக்கின்றார். இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதிக ளும் இதே வேலையை செய்தனர் மாற்றம் என்று சொல்லி வந்தவரும் இதே வேலையை செய்கின்றார்.

அவர்கள் எமது பிரச்சினையை தீர்ப்பார்கள் என யாரும் எண்ணக்கூடாது.

இதற்காகவே நாங்கள் எங்களுக்கான விடயங்களை ஒப்பந்தம் மூலம் எழுதுவோம் என்றால், ஈதற்கு அவர்கள் தயார் இல்லை. தென்னிலங்கையில் வாக்குகள் குறைந்து விடும் என அச்சப்படுகின்றார்கள். மயிலிட்டியில் மீன் பிடித்து மொத்த தேசிய கடலுணவு உற்பத்தில்,

46வீதத்தினை நாட்டிற்கு கொடுத்துள்ளோம். ஆனால் நாடு குட்டிசுவரானாலும் பரவாயில்லை எங்களுக்கு அந்த 46 சதவீதம் தேவையில்லை என்று நினைக்கின்றார்கள். சீமெந்து தொழிற்சாலை உப்பளம் என பல இருக்கின்றது. அவற்றை மீள இயக்க தென்னிலங்கை தயாராக இல்லை.

தமிழர்கள் சமமாக இருக்கக் கூடாது என நினைக்கின்றார்கள். இதனை புரிந்து கொள்ளாமல் தென் னிலங்கை கட்சிகளுக்காக எங்கள் மக்கள் வேட்பாளர்களாக மாறி பிரசாரம் செய்கின்றனர். தமிழ் கட் சிகள் போட்டியிடட்டும். ஆனால் இவ்வாறு பிரிந்து கிடப்பதை நாங்கள் விரும்பவில்லை.

தலைவர் எதை விரும்பி ஒரு கூட்டமைப்பை உருவாக்கினாரோ அது இன்று இல்லை. அங்கு தேசிய வாதிகள் உள்வாங்கி இருந்தால் இன்று கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருக்காது. தேசியம் என்றால் என்ன? அது இங்கே விலைக்கு வாங்க முடியும்?

என்று கேட்கக்கூடிய வேட்பாளர்கள் தான் என்று அங்கு உள்ளனர் – என்றார்.