SuperTopAds

ஜனாஸா எரிக்கும் போது அதாவுல்லாஹ் நாட்டில் இல்லையா?-எங்கே போனீர்கள் -கேள்வி எழுப்பும் -முகம்மட் ரஸ்மின்

ஆசிரியர் - Editor III
ஜனாஸா எரிக்கும் போது அதாவுல்லாஹ் நாட்டில் இல்லையா?-எங்கே போனீர்கள் -கேள்வி எழுப்பும் -முகம்மட் ரஸ்மின்

ஜனாஸா எரிக்கும் போது அதாவுல்லாஹ் நாட்டில் இல்லையா?-எங்கே போனீர்கள் -கேள்வி எழுப்பும் -முகம்மட் ரஸ்மின்

அதாவுல்லாஹ்விடம் நாங்கள் ஒன்று கேட்க விரும்புகின்றோம்.ஜனாஸா  எரிக்கும் போது நீங்கள் எங்க வாப்பா இருந்தீங்கள். இப்போது வந்து பாட்டு படிக்கிறீங்க? ஜோக் எல்லாம் அடிக்கிறீங்க? கேலி கிண்டல் எல்லாம் செய்றீங்க? எல்லாமே சரி தான். உங்கள் காமெடியை நாங்கள் ரசிக்கின்றோம் அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஜனாஸா எரிக்கின்ற போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்.சீலை கட்டிய  போராட்டம் எதுக்கு நடந்தது என்று உங்களுக்கு தெரியுமா? அது உங்களுக்கு கிண்டலா? ஜனாஸாவை எரித்தது உங்களுக்கு கேலியா? கோதாவிற்காக  கடைக்கு போய் கோட்டாவுக்கு கூஜா தூக்கி கோட்டாவுக்கு வால் பிடித்து கோட்டாவுக்கு வெட்கமில்லாமல் அவரோடு  நீங்கள் இருந்தீர்கள்.சீலை  கட்டி போராட்டம் நடத்தியவர்களை  கிண்டல் செய்கின்றீர்களா? கேலி செய்கிறீர்களா? வெட்கப்பட வேண்டாமா? மன்னிப்பு கேட்க வேண்டாமா? என 'வி ஆ வண்'( WE ARE ONE ) அமைப்பின் இணைப்பாளர்  முகம்மட்  ரஸ்மின் கேள்வி எழுப்புகிறார்  .

அம்பாறை ஊடக மையத்தில்  எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு சமகால அரசியல் தொடர்பாக    நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் ஆக்ரோசமாக மேலும் தெரிவிக்கையில்…


கடந்த சில நாட்களாக தேர்தல் மேடைகளில் வேட்பாளர் ஏ.எல்.எம்  அதாவுல்லாஹ் பேசுகின்ற  வார்த்தைகள் எம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது.20 ஆவது அரசியல் சீர்த்திருத்தத்திற்கு கை நீட்டியதன்  காரணமாக ஜனாசா எரிக்கப்பட்டது என்று மக்கள் கதைக்கின்றார்கள். ஆனால் அது ஒரு மாபெரும் சட்டம் அதை இவ்விடத்தில் சொல்ல முடியுமா அதைப் பற்றி மக்களுக்கு  தெரியுமா என வேட்பாளர் அதாவுல்லாஹ் கேலியாக  கேட்கிறார். முதலில் நான் ஒன்றை அவரிடம்  கேட்க விரும்புகின்றேன்.

சகோதரர் அதாவுல்லாஹ் அவர்கள் முதலில் ஒன்றை  புரிந்து கொள்ளுங்கள். இது பாராளுமன்ற தேர்தல் களம்.இங்கு   சிறந்த நகைச்சுவையாளரை தெரிவு செய்யும் களம் அல்ல. இது விஜய் டிவியின் நிகழ்ச்சியும் அல்ல. ஜீ தமிழ் டிவியின் நிகழ்வும் இல்லை. காமெடி நடிகர்களை தெரிவு செய்கின்ற ஒரு நிகழ்ச்சி இல்லை என்பதை வேட்பாளர் அதாவுல்லாஹ்   புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது சிலருக்கு  பொழுது போக்குவிற்கு   அதாவுல்லாஹ்வின்  காணொளிகளை பார்த்தால் போதும் என்ற நிலை  மாறி இருக்கிறது. பாராளுமன்ற வேட்பாளர் மாதிரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாதிரி ஒரு கட்சியினுடைய தலைவர் மாதிரி நடந்து செயல்படுகின்றீர்களா? நீங்கள் பேசுகின்ற  இவ்வாறான பேச்சுக்கள் இளைஞர்களை கவர்கின்றது என்று நினைக்கின்றீர்களா? என்று கெட்கின்றேன்.

ஆனால்  காமெடிக்காக இளைஞர்கள்  இந்த பேச்சுக்களை கேட்கின்றார்கள். தேர்தல் காலத்தில் இது நல்லா இருக்கும். அதாவுல்லாஹ் பேச்சை கேட்டுவிட்டு  போவோம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.ஆனால் அதாவுல்லாஹ்  நீங்கள் பெரிய அறிவாளி என்று இங்கு யாரும் உங்கள் பேச்சை  கேட்கவில்லை. குறிப்பாக 20 க்கு கை தூக்கியது மாபெரும் ஒரு சட்டம் அது  . உங்களுக்கு தெரியுமா என்று கேட்கிறீர்களே  அந்த சட்டத்தைப் பற்றி நாங்கள் உங்களுக்கு பாட நடத்த வேண்டுமா என்று கேட்கின்றோம்.

அன்பான பொதுமக்களே இவ்வாறானவர்களின் இலட்சணங்களை  நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எமது தலைவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரியுமா? மஹிந்த ராஜபக்ச  ஜனாதிபதியாக இருக்கின்ற வேளை  தனக்கு இருக்கின்ற அதிகாரம் போதாது. மேலதிகாரம் வேண்டும் என்று 17 க்கு பிறகு 18 ஆவது  அரசியல் சீர்திருத்தத்தை கொண்டு வருகிறார்கள். அதற்கும் எம்மவர்கள்  கை தூக்கினார்கள்.தொடர்ந்து  18 ஆவது அரசியல் சீர்திருத்தத்தின்  பின்னர் ஆட்சிக்கு வந்தவர்  அதிகாரத்தை குறைக்க போகின்றேன் என்று கூறி 18 வது அரசியல் சீர்திருத்த்தற்கு  பதிலாக   19 ஆவது சட்டத்தை மைத்திரி  என்பவர்  கொண்டு வந்தார். அதற்கும் எம்மவர்கள்  கை தூக்கினார்கள். தொடர்ந்து மேலதிக  அதிகாரம் வேணும் குறைந்த அதிகாரம் தேவையற்றது என  கூறி 20 அரசியல் சீர்திருத்தத்தை  வலியுறுத்தி  கோட்டபாய  ராஜபக்ஷ அவர்கள் கொண்டு வந்தார். 20 வது அரசியல் சீர்திருத்தம் அதற்கும் எம்மவர்கள்  கை தூக்கினார்கள்.

எமது  கேள்வி யாதெனில்  நீங்கள்  கடந்த தேர்தல் மேடைகளில்  எதைச் சொல்லி வாக்கு கேட்டீர்கள். கோட்டாவை எப்படி காட்டினீர்கள் இப்போது கோட்டபாய ராஜபக்ஸவினை  எப்படி காட்டிக் கொண்டிருக்கிறீர்கள். உண்மையில் கோட்டபாய  ஒரு கொடூரன். கோட்டபாய  இந்த நாட்டுக்கும் சமூகத்துக்கும் செய்யாத கொடுமைகள் இல்லை. அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. கிழக்கு மாகாணத்திற்கு பசில் ராஜபக்ஷ வந்தபோது அவருக்கான வரவேற்பு எப்படி இருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டார்கள். ஆனால் வாக்களித்தார்களா? மரியாதைக்காக அவரை அங்கு  வரவேற்கின்றார்களே தவிர யாராவது வாக்களித்தார்களா? இல்லை. அதாவது கோட்டாபய ராஜபக்ஷ ரெஜிமென்ட் எப்படி என்று மக்களுக்கு நன்கு தெரியும். அதனால் தான் மக்கள் வாக்களிக்காமல் அவர்களுக்கு எதிரணியில் உள்ள உங்களுக்கு வாக்களித்தார்கள் நீங்கள் எல்லாம் அங்க போய் என்ன செய்தீர்கள்? அங்கு சென்று  கோட்டபாய  ராஜபக்ஷவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளீர்கள்.ஆனால்  பொதுமக்கள் கோட்டபாயவிற்கு  வாக்களிக்கவில்லை.என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இது தவிர கோட்டபாய  ராஜபக்ஷ 69 இலட்சம் வாக்குகளோடு வந்திருக்கின்றார். பாராளுமன்றத்தில் அவர்களுக்கு எல்லாம் கிடைக்கின்றது. அதுவும் போதாது என்று அதிகாரத்தை எல்லாம் கேட்கின்றார். அதன் போது அவர் யாரென்று உங்களுக்கு தெரியவில்லையா? மைத்திரிபால சிறிசேன போன்று ஒன்றுக்கும் உதவாதவரா கோட்டபாய ராஜபக்ஸ. அவரது  கொடூரங்களை இந்த நாடு அறியாமல் இல்லை.அவரைப் பற்றிய விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் பொய்யா? அவர் மீது போடப்பட்ட வழக்குகள் யாவும் பொய்யா? அவர் யாரு எப்படிப்பட்டவர் என்று எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட ஒருவருக்கு 20 வது அரசியல் சீர்திருத்தம் என்ற பேரில் அனைத்து அதிகாரத்தையும் தூக்கி கையில் கொடுத்தால் என்ன பண்ணுவார். பேயாட்டம் ஆடுவார்.   நாடு நடுத்தெருவுக்கு வந்து நிற்கும் என   படித்தவர்கள் சொன்னார்கள் அழுது புலம்பினார்கள் கெஞ்சி கேட்டார்கள்.அல்லவா?

 இவ்விடயம்  அதாவுல்லாஹ்க்கு  புரியவில்லையா? ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பாகவும்   அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாகவும் 20 ஆவது அரசியல்  சீர்திருத்தத்திற்கு சிலர்  கை தூக்கினார்கள்.இப்படி முழுவதுமாக இரு சாராரும்   கை தூக்கியதன்  காரணமாக 20 நாட்கள் குழந்தையை  எரித்தார்கள். நான்கு மாத பிள்ளையை எரித்தார்கள். 40 நாள் பிள்ளையை எரித்தார்கள். 300-க்கும் மேற்பட்ட ஜனாஸா எரித்தார்கள். கடைசியில் எரித்தது பரவாயில்லை. அடக்கவும்  அனுமதி தந்தார்கள். அதுவும் மட்டக்களப்பு  ஓட்டமாவடி மஜ்மா நகரில் அடக்கம் செய்ய சொல்கிறார்கள்.காலி மாவட்டத்தில்  ஒருவர் மரணித்தால் கூட ஓட்டமாவடிக்கு தான்  அடக்கம் செய்ய வேண்டும்.உலகத்தில் இந்த விஞ்ஞானத்தில் யாராவது இதை  சொன்னார்களா? ஒரு நாள் இந்தியாவில் கூட கொரோனா ஜனாஸாக்கள் எரிக்கப்பட வேண்டும் என்று ஒரு அறிவிப்பு  இருந்தது.அங்குள்ள அப்போலோ வைத்தியசாலை அதனை தடுத்து நிறுத்துமாறு கூறியிருந்தது .அதனால் இந்திய அரசாங்கம் எரிப்பதை  ரத்து செய்தது. ஜனாஸாக்களை அடக்குங்கள் என அங்கு    அனுமதி கொடுத்தது. ஆனால்    இந்த எரிப்புக்கு துணை போனவர்கள் கருப்பு பட்டியை கையில் கட்டி விட்டு 20 க்கு  கையை உயர்த்தி தூக்கிய துரோகிகள். தற்போது வந்து அது ஒரு மாபெரும் சட்டமூலம் அதைப்பற்றி இவர்களுக்கு தெரியுமா என்று கேட்கின்றார்கள். அதாவுல்லாஹ்விடம் நாங்கள் ஒன்று கேட்க விரும்புகின்றோம்.

ஜனாஸா  எரிக்கும் போது நீங்கள் எங்க வாப்பா இருந்தீங்கள். இப்போது வந்து பாட்டு படிக்கிறீங்க? ஜோக் எல்லாம் அடிக்கிறீங்க? கேலி கிண்டல் எல்லாம் செய்றீங்க? எல்லாமே சரி தான். உங்கள் காமெடியை நாங்கள் ரசிக்கின்றோம் அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஜனாஸா எரிக்கின்ற போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்.சீலை கட்டிய  போராட்டம் எதுக்கு நடந்தது என்று உங்களுக்கு தெரியுமா? அது உங்களுக்கு கிண்டலா? ஜனாஸாவை எரித்தது உங்களுக்கு கேலியா? கோதாவிற்காக  கடைக்கு போய் கோட்டாவுக்கு கூஜா தூக்கி கோட்டாவுக்கு வால் பிடித்து கோட்டாவுக்கு வெட்கமில்லாமல் அவரோடு  நீங்கள் இருந்தீர்கள்.சீலை  கட்டி போராட்டம் நடத்தியவர்களை கிண்டல் செய்கின்றீர்களா? கேலி செய்கிறீர்களா? வெட்கப்பட வேண்டாமா? மன்னிப்பு கேட்க வேண்டாமா? அம்பாறை மாவட்ட மக்களிடம் தற்போது கேட்கின்றேன்.

 இந்த வெட்கம் கெட்டவர்கள்  துரோகிகளை மீண்டும் மீண்டும் மேடையை அழைத்து  அழகு பார்க்க வேண்டாம். இன்றைக்கு நாங்கள் அவ்வளவு முட்டாள்களா அவ்வளவு கேவலம் கெட்டவர்களா? அவர் பேசுகின்ற பேச்சுகள் எல்லாம் மிகப்பெரிய துரோகங்களாக இருக்கின்றது. எனவே அதாவுல்லாஹ அடக்கிப் பேச வேண்டும். ஜனாஷா எரிப்பு பற்றி கிண்டல் அடிப்பது கேலி செய்வதை முதலில் நிறுத்த வேண்டும். அவ்வாறு நிறுத்தாவிட்டால் அதாவுல்லாஹ்வின் பண்டவாளங்கள் கண்டிப்பாக தண்டவாளம் ஏறும் என்பதை  அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

அது மாத்திரமல்ல அதாவுல்லாஹ் அப்படி உங்களுக்கு பெரிய ஒரு வாக்கு வாங்கி இருந்தால் ஏன் நீங்கள்  வீடு வீடாக  போய் வாக்கு பிச்சை கேட்டு  கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அப்படியெல்லாம் போற ஆள் கிடையாதே. இப்ப வீடு வீடா வாக்கு கேட்டு போகிறீர்கள்.  நீங்கள் சரியான ஆளாக இருந்திருந்தால் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஓடிப் போய் இருக்க வேண்டும். நீங்கள்  ரணில் ஏறுகின்ற பஸ்ஸில் ஏற மாட்டேன் என  சொன்னீங்களா இல்லையா. இப்ப ரணில் இருக்கின்ற பஸ்ஸிலே மட்டுமா இருக்கிறீர்கள். ரணில் அணிந்த கோட்டையும் அல்லவா  கேட்கிறீர்கள்.

அதாவது 20 ஆவது  சட்டம்  மாபெரும் சட்டம்.அது  மக்களுக்கு தெரியுமா என்று கேட்கிறீர்கள் தானே .அந்த சட்டம் எங்களுக்கு தெரியவில்லை என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் ஒரு  தலைவர் . உங்கள்  சட்ட நுணுக்கத்தின் இலட்சனத்தை நாங்கள் கூற விரும்புகின்றோம். கோத்தபாய  ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் நீங்கள் முதலாவது பாராளுமன்றத்திற்கு சென்றீர்கள்.அங்கு சென்ற   உங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எவ்வாறான ஆடை  அணிய வேண்டும் என்று தெரியவில.லையா . உங்களை ஆதரித்த கோட்டாவின் ஆட்கள்  உங்களை  மீண்டும்  ஆடையை  மாற்றி அணிந்த வாருங்கள் என   வெளியே அனுப்பவில்லையா. பாராளுமன்றத்தின் ஆடை புரட்டக் கோள் உங்களுக்கு தெரியவில்லையா? நீங்கள் 20ஆவது அரசியல் சீர்திருத்தத்திற்கு  எங்களுக்கு பாடம் எடுக்க வாரீங்களா? முதலாவது அதாவுல்லாஹ் அவர்கள் இந்த விவகாரங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.என்றார்.