SuperTopAds

அனுர அரசுக்கு எதிராக யாழில் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
அனுர அரசுக்கு எதிராக யாழில் போராட்டம்..

நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவின் அரசாங்கத்தின் நியமனத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நேற்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பனை அபிவிருத்தி சபைக்கு புதிய தலைவர் நியனம் மற்றும் அவர் அச் சபையின் ஊழியர்களுடன் நடந்து கொள்ளும் அநாகரிகமாக செயற்பாடுகளை கண்டித்தே இந்த ஆர்ப்பாடம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க பதிவியேற்ற பின்னர் பனை அபிவிருத்தி சபையின் தலைவராக செல்வின் நியமிக்கப்பட்டார். 

அவர் தனது கடமைகளை பெறுப்பேற்று சில தினங்களின் அவர் மாற்றப்பட்டு புதிய தலைவராக வி.சகாதேவன் நியமிகக்ப்பட்டார்.

இவ்வாறு நியமிக்கப்பட்ட புதிய தலைவர் மீது பல அமைப்புக்கள் ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். 

இந்நிலையில் பனை அபிவிருத்தி சபையின் ஊழியர்களை குறித்த புதிய தலைவர் தரக்குறைவான வார்த்தை பிரயோகங்களால் பேசியமை ஊழியர்களை கோபமடைய வைத்திருந்தது.

இதன்படி இன்று புதன்கிழமை காலை யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் உள்ள பனை அபிவிருத்தி சபையின் தலைமை காரியாலயத்திற்கு முன்பாக ஒன்று கூடிய ஊழியர்கள் புதிய தலைவருக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

“NPP அரசே தகுதயற்ற புதிய தலைவர் நியமனத்தை உடனடியாக ரத்துச் செய், பனை தறித்த காசுதான் ஊழியர்களின் ஊதியமா?, நிர்வாக திறன் அற்ற பதில் பொதுமுகாமையாளரை உடனடியாக பதிவி நீக்கம் செய், 

NPP அரசே செல்வினின் பதவி நீக்கத்திற்கு தகுந்த காரணம் கூறு, அண்ணன் பதில் முகாமையாளர் ஊழலை மறைக்க தங்கை உள்ளக கணக்காய்வாளர், 

பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் தண்டச் சோறுகளா?, ஊழலற்ற அரசின் தலைவர் நியமனம் இதுவா? என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.