SuperTopAds

தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் முயற்சி இன்று நேற்று நடந்ததல்ல.. பதற தேவையில்லை - சித்தார்த்தன்..

ஆசிரியர் - Editor I
தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் முயற்சி இன்று நேற்று நடந்ததல்ல.. பதற தேவையில்லை - சித்தார்த்தன்..

வாக்குகளை சிதறடிப்பதற்காக இப்போது மட்டுமல்ல கடந்தகாலங்களிலும் தமிழர் பிரதேசங்களில் பல கட்சிகள், சுயேட்சை குழுக்கள் களமிறக்கப்பட்டன என கூறியுள்ள ஜனநாயக தமிழ்தேசிய கட்சியின் முதன்மை வேட்பாளர் த.சித்தார்த்தன், இது குறித்து மக்கள் அங்கலாய்க்க தேவையில்லை எனவும் தெரிவித்திருக்கின்றார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தெற்கில் ஏற்பட்ட மாற்றம் தெற்கு மக்களை பொறுத்தமட்டில் அவர்கள் எதிர்பார்த்த மாற்றமாகும். ஆன hல் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் தெற்கு மக்களின் எதிர்பார்ப்புக்குமிடையில் பாரிய வித்தியாசம் உள்ளது. நாடு சுதந்திரம் பெற்றது முதல் தமிழ் மக்கள் அரசியல் உரிமைகளைக் கோரி போராடி வரு கின்றனர். எம்மக்களின் கோரிக்கைகள் எந்தவொரு அரசாலும் நிறைவேற்றப்படவில்லை.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தெற்கில் ஏற்பட்ட மாற்றம் கூட தமிழ் மக்களுக்கு எந்த விதத்திலும் உ தவியாக இல்லை. புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தமிழ் மக்களின் நியாயமான கோரி க்கையை நிறைவேற்ற முயற்சி எடுத்து அதனை நிறைவேற்றுவாராக இருந்தால் தான் தமிழ் மக்கள் மத்தியில் பொருளாதார ரீதியான ஒரு மாற்றம் ஏற்படும்.

ஆனால் ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை கொண்டுவர முயற்சிகள் எடுப்பார் என்று நான் கருதவில்லை. இம்முறை தேர்தலில் தமிழ் மக்கள்  பல கட்சிகளாக, சுயேச்சைக் குழுக்களாக பிரிந்து நின்று இத்தேர்தலை சந்திப்பது துரதிர்ஷ்டமான விடயம். இருந்தாலும் நான் நம்புகின்றேன் பல சுயேச்சைக் குழுக்களும், கட்சிகளும் ஒவ்வொரு தரப்பின் தூண்டுதலினால்

தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்க போடப்பட்டுள்ளவைகளாகும். யாழ்ப்பாண தேர்தல் தொகுதியி ல்  தமது உறுப்பினர்கள் இல்லாத போதும் சிங்கள கட்சிகள் போட்டியிடுகின்றன. அதேபோல பல சுயேட்ச்சைக் குழுக்கள் எவரென்று தெரியாத நபர்களை கொண்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இவையெல்லாம் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்க  எடுக்கப்பட்ட நடவடிக்கை.

இத்தேர்தலில் மாத்திரமல்ல கடந்தகால தேர்தலிலும் இப்படியான நடவடிக்கைகள் நடந்தேறியுள்ளன. இவற்றைக்கண்டு அங்கலாய்க்கவேண்டிய அவசியம் கிடையாது. ஏமது மக்கள் இப்படியானவர்களை அi டயாளம் கண்டு தமிழ்தேசிய பரப்பிலுள்ள கட்சிகளுக்கு மட்டும் கடந்தகாலத்தைபோல் வாக்களிப்பார்க ள் என்றார்.