பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறித்த எனது கணிப்பு பிழையானது..முதலமைச்சர் சீ.வி..

ஆசிரியர் - Editor I
பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறித்த எனது கணிப்பு பிழையானது..முதலமைச்சர் சீ.வி..

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வடமாகாணத் திற்கு வந்து நிலமைகளை பார்வையிட்டாலும் அத னை தெற்கு மக்களுக்கு கூறுவார் என நான் நம்பத் தயாரில்லை. என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. க்னேஷ்வரன் கூறியுள்ளார்.

ஊடகங்களுக்கு முதலமைச்சர் வாராந்தம் வழங்கும் கேள்வி பதிலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்ப பட்டுள்ளது.  

அந்த கேள்வி பதில் இப்படி உள்ளது,

கேள்வி - வடக்கை வந்து பார்த்து மக்களின் கருத்துக்களை அறிந்து செல்லுமாறு நீங்கள் விடுத்த கோரிக்கைக்கு நடிக பாராளுமன்ற உறுப்பினர் இரஞ்சன் இராமநாயக்க ஒத்துக்கொண்டுள்ளாரே. இது பற்றி? 

பதில் - ஆம். அவர் தனி சிங்களத்தில் கடிதங்கள் அனுப்பியுள்ளார். அவற்றை மொழிபெயர்க்கக் கொடுத்துள்ளேன். தொடக்கமே பிழை போலத் தெரிகிறது. 

மேலும் நான் அவருக்கு வடக்குக்கு வந்து செல்லுமாறு கூறியதன் பின்னரே அவர் கௌரவ விஜயகலா சம்பந்தமாக அவரிடம் சம்மதம் பெறாமல் அவருடனான கருத்துப் பரிமாற்றங்களை வலைப்பின்னல்களுக்கு வெளியிட்டுள்ளார். 

இது ஒரு குற்றமாகக் கணிக்கக்கூடிய விடயம். குறித்த நபரை வடக்கிற்கு வருமாறு அழைத்ததின் பின்னர் நடைபெற்ற அவர் சார்பான நிகழ்வுகளும் அவர்பற்றி என் கொழும்பு நண்பர்கள் கூறிவருவதும் அவ்வளவு ஏற்புடையதாகத் தெரியவில்லை. 

இவர் வடக்கு வந்து உண்மையை அறிந்து தெற்கிற்கு தெரியப்படுத்தக்கூடிய ஒருவராகத் தெரியவில்லை. நான் அவரை காலஞ்சென்ற விஜய் குமாரணதுங்க போன்ற ஒருவர் என்றே முதலில் எண்ணினேன். என் எண்ணம் தவறென இப்போது தெரிகின்றது. 

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு