SuperTopAds

சிறீதரன் தொடர்ந்தும் தமிழரசு கட்சியில் இருக்க பார் பெமிட் டீல் காரணமா?

ஆசிரியர் - Editor I
சிறீதரன் தொடர்ந்தும் தமிழரசு கட்சியில் இருக்க பார் பெமிட் டீல் காரணமா?

ஜனநாயகமற்ற தமிழரசு கட்சியில் அதன் மூத்த உறுப்பினர்கள் விலகிய நிலையில் சிறீதரன் விலாகமைக்கு காரணம் என்ன அவ்வாறாயின் அவர் பார் பெமிட் பெற்றது உண்மையா என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் ஈஸ்வரபாதம் சரவணபவன் கேள்வி எழுப்பினார்.

பூநகரி பிரதசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

40 வருடங்களாக எனது பத்திரிகை இன்றுவரை தேசிய ரீதியில் பயணிக்கின்றது. காணாமல் போனோர் சுயநிர்ணய உரிமை என்று பல விடயங்களை தமிழ் மக்களாகிய நாம் தொடர்ந்து வைத்திருக்கின்றோம் இவற்றை 2004, 2010, 2015, 2020 என தொடர்ந்து சொன்னோம். 

ஆனால் இன்று மாற்றம் தேவை அபிவிருத்தியும் உரிமையுடன் இணைந்து முன்னெடுக்கபடவேண்டிய ஒன்றாகும் .ஆனால் நாங்கள் ஒன்றையும் அடையவில்லை . 

கிளிநொச்சியில் பாராளுமன்ற உறுப்பினர்களை தொடர்ந்து  தெரிவு செய்து வருகின்றீர்கள். ஆனால் உங்களுக்கு அபிவிருத்தியை முன்னெடுக்கூடிய தேசிய உணர்வுடன் கூடிய தலைமைத்துவம் கிளிநொச்சி வாழ் மக்களுக்கு தேவை ஆனால் பலதரப்பட்ட எதிர்ப்புகளை தமது அரசியல் இலாபங்களுக்காக ஏற்படுத்துகின்றார்கள்.

உதாரணத்திற்கு சொல்லுகின்றேன் ஏக்கர் கணக்கில் சில வருடங்களுக்கு முன்னர் கரும்பு தோட்ட பயிர்செய்கையை முன்னெடுக்க இங்கே  வந்தார்கள்.

ஆனால் மாகாண சபை அதற்குரிய அனுமதியினை  வழங்கவில்லை. ஆனால் அதே கரும்பு தோட்டம் இன்று பொலன்னுறுவையில் உள்ளது அங்கு நீர் வற்றிவிட்டதா.

இங்கு என்ன வந்தாலும் எதிர்ப்பது அரசியல் வாதிகளின் சுயலாப அரசியல் ஆகும். எப்பொழுதும் போல பின்தங்கிய "பின்தங்கிய" என்ற பெயரை பாவிக்காது உங்களை முன்னேற்றும் தலைமைத்துவத்தை நீங்கள் முன்னெடுக்க வேண்டும்.

எனக்கு வட்டுக்கோட்டை தொகுதி இலங்கை தமிழரசு கட்சியால் வழங்கபட்டது .ஆனால் என்னால் 600 மில்லியன் ரூபாய்க்கு என்றும் திட்டம் வழங்கப்பட்டது. எத்தனை மக்களுக்கு இலவச மின்சார இணைப்பு ,இலவச வீட்டு திருத்தம, வழங்கப்பட்டது.

மேலும் எமது அபிவிருத்தி சார்ந்த விடயங்களை தேடி நாம் அமைப்புக்களுக்கு செல்லவேண்டும். அங்கு செல்வதால் எமக்கு குறைவணபோவதில்லை .எமது வரிப்பணம் எமக்கு திரும்பி வர சம்பந்தபட்ட திணைக்களங்களை அணுகி அபிவிருத்திகளை கொண்டுவர நீங்கள் முயற்சிக்க வேண்டும்.

மாவை சேனாதிராஜா போல வீட்டு ஒரு வாக்கு கட்சிக்காக ஒரு வாக்கு என்று அல்லாமல் மிக சரியாக கடந்த காலங்களை சிந்தித்து நடவடிக்கைகளை எடுங்கள் .எனவே மாற்றம் வேண்டும் உங்கள் மாவட்டத்திற்கு மாற்றி பாருங்கள்

துரதிருஷ்டவசமாக தமிழரசு கட்சி முற்று முழுதாக ஒரு தனிநபரால் உடைக்கப்பட்டு விட்டது அந்த தனிபர் இன்று தமிழரசு கட்சியினை வழக்கில் தள்ளிவிட்டுள்ளார். வேட்பாளர் தெரிவிலும் தன்னிச்சையாக செயற்பட்டார்.

மேலும் அன்று சுமந்திரன் திருவாளர் சிறீதரனை கேளா கேள்வி கேட்டும் அங்கு இருக்கின்றார். அவர் துணிந்து வெளியில் வந்திருந்தால் பலர் வரவேற்றிருப்பார். அதற்கு  தேசியம் போய்விடும் என கதை சொல்லுகின்றார். யாழ் மாவட்டத்தில் சிறீதரன் தனக்கு போடாவிட்டாலும் வீட்டிற்கு வாக்களியுங்கள் என கேட்கிறார். இதன் மூலமம் கட்சியை இவ்வளவு தூரம் கொண்டு வந்த சுமந்திரனை பாராளுமன்றம் அனுப்ப முயல்கிறார்.

அன்ரன் பாலசிங்கம் போல சுமந்திரனை ஒப்பிட்டவர் பின்பு அவரை எதிர்த்து இப்பொழுது சுமந்திரனை கண்டு அஞ்சுகின்றார். ஆக சுமந்திரன் சிறீதரன் மீது சுமத்தும் பார் லைசன்ஸ் கதை உண்மை போல என் அறிய முடிகிறது.எம்மிடம் வல்லைமை வேண்டும்.

இதன் காரணமாக தான் அனுர மீதான அலை எழும்பியது .அவரும் பதவிக்கு வந்த பின் அவர் மீதான அலை அன்று போய்விட்டது. இளைஞர்களாகிய நீங்கள் அபிவிருத்தி நோக்கி பயணிக்க வேண்டும்.இதனை வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இருக்க வேண்டும்.நானும் வாக்கினை உங்களிடம் கேட்கிறேன். முன்பு எனக்கு கட்டுப்பாடு இருந்தது எனது தொகுதியைதான்டி கிளிநொச்சி வந்தால் கட்சிக்குள் பிரச்சினை ஆனால் இன்று நான் சுயேட்சை சுயாதீனமாக இங்கு பூநகரி வரை வந்து செயற்பட முடகிறது.

பொது வேட்பாளரை ஆதரித்து நான் உட்பட சிறீதரன் மீது ஒழுக்காற்று கடிதம் வழங்கபட்டது . இந்நிலையில் சிறீதரன் எம்பியானால் கூட சுமந்திரன் மத்திய குழுவினை கூட்டி சிறீதரனின் எம்பி பதவியினை இராஜனாமா செய்ய கூடும் . தமிழரசு கட்சியின் முக்கியமான பலர் இன்று அங்கு இல்லை . எனவே சிக்கல்களை பற்றியும் நான் சொல்லியிருக்கின்றேன்.

ஆரோக்கியமான வேட்பாளர் இல்லாத காரணத்தாலேயே நாங்கள் வெளியே வந்து கேட்கின்றோம். அங்கே உண்மையாக கட்சியின் நலனை கருத்திற் கொண்டு ஜனநாயகரீதயாக வேட்பாளர் தெரிவு நடந்திருந்தால் நிச்சயமாக அங்கேயே இருந்திருப்போம்.

எமது சுயேச்சையில் கடற்புலி தளபதி அச்சுதன்கூட இணைந்துள்ளார். இந்த கட்சியினை பதிவு செய்து வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுவேன்.