இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம்..... ஹசார்ட் அதிரடி கோல்...... பெல்ஜியம் 2-0 என முன்னிலை!

ஆசிரியர் - Editor II
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம்..... ஹசார்ட் அதிரடி கோல்...... பெல்ஜியம் 2-0 என முன்னிலை!

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: 52 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை வெல்லும் கனவோடு களமிறங்கிய இங்கிலாந்து தற்போது நடக்கும் 3வது இடத்துக்கான போட்டியில் பெல்ஜியத்துடன் மோதுகிறது. ஆட்டத்தின் 4வது நிமிடத்திலேயே மியூனியர் கோலடிக்க 1-0 என பெல்ஜியம் முன்னிலை பெற்றது. முதல் பாதி இறுதியில் 1-0 என பெல்ஜியம் முன்னிலையை தக்க வைத்தது. 82வது நிமிடத்தில் ஈடன் ஹசார்ட் கோலடிக்க பெல்ஜியம் 2-0 என முன்னிலை பெற்றது. ரஷ்யாவில் நடக்கும் 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி நிறைவை எட்ட உள்ளது. 15ம் தேதி இரவு நடக்கும் பைனலில் பிரான்ஸ் மற்றும் குரேஷியா மோத உள்ளன. அதற்கு முன், 3வது இடத்துக்கான ஆட்டம் நாளை இரவு 11.30 மணிக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடக்கிறது. இதில் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் மோதுகின்றன.

1982 மற்றும் 2006க்குப் பிறகு ஐரோப்பாவைச் சேர்ந்த நான்கு அணிகள் அரை இறுதியில் விளையாடின. தொடர்ந்து நான்காவது முறையாக ஐரோப்பிய நாடே கோப்பையை வெல்ல உள்ளது. 2006ல் இத்தாலி, 2010ல் ஸ்பெயின், 2014ல் ஜெர்மனி கோப்பையை வென்றன.

இங்கிலாந்து பரிதாபம் இந்த உலகக் கோப்பையில் ஜி பிரிவில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து, லீக் சுற்றில் 3ல் 2 வெற்றி, ஒரு தோல்வியைப் பெற்றது. துனீஷியாவை 2-1, பனாமாவை 6-1 என்று வென்ற இங்கிலாந்து, கடைசி ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் 1-0 என தோல்வியடைந்தது. நாக் அவுட் சுற்றில் 4-3 என பெனால்டி ஷூட்அவுட்டில் கொலம்பியாவை வென்றது. கால் இறுதியில் ஸ்வீடனை 2-0 என வென்றது. அரை இறுதியில் குரேஷியாவிடம் 2-1 என தோல்வி அடைந்தது.

பெல்ஜியம் அபாரம்

பெல்ஜியம் அபாரம் 

இந்த உலகக் கோப்பையில் லீக் சுற்றில் மூன்று ஆட்டங்களிலும் வென்ற மூன்று அணிகளில் ஒன்றாக பெல்ஜியம் உள்ளது. ஜி பிரிவில் பனாமாவை 3-0, துனீஷியாவை 5-2, இங்கிலாந்தை 1-0 என வென்றது. நாக் அவுட் சுற்றில் 3-2 என ஜப்பானை வென்றது. காலிறுதியில் முன்னாள் சாம்பியனான பிரேசிலை 2-1 என வென்றது. அரை இறுதியில் பிரான்ஸிடம் 1-0 என தோல்வியடைந்தது.

முன்னேறுமா பெல்ஜியம்

முன்னேறுமா பெல்ஜியம் 

தற்போது 13வது உலகக் கோப்பையில் விளையாடும் பெல்ஜியம், 1986ல் நான்காவது இடத்தைப் பிடித்தது. கடந்த உலகக் கோப்பையில் காலிறுதி வரை நுழைந்து அசத்தியது. இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை என்றபோதும், மிகவும் வலுவான அணியாக பெல்ஜியம் உள்ளது. மூன்றாவது இடத்தைப் பிடித்து உலகக் கோப்பையில் தனது சிறப்பான இடத்தைப் பிடிக்க பெல்ஜியம் முயற்சிக்கும்

மூன்றாவது இடம் பிடிக்குமா

மூன்றாவது இடம் பிடிக்குமா 52 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் இருந்த இங்கிலாந்து, அரை இறுதியில் கடைசி நேரத்தில் தோல்வி அடைந்தது. கோப்பையை வெல்லக் கூடிய அணியாக பார்க்கப்பட்ட பிரேசிலை வென்று அசத்திய பெல்ஜியம் மிகவும் வலுவாக உள்ளதால் கடுமையான சவாலை இங்கிலாந்து சந்திக்க நேரிடும். கோப்பையை வெல்ல முடியாத நிலையில், கடைசி ஆட்டத்தில் வெற்றியுடன் மூன்றாவது இடத்தை இங்கிலாந்து பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு