பங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பணிப்பாளருக்கு த.தே.கூட்டமைப்பு கண்டனம்..

ஆசிரியர் - Editor I
பங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பணிப்பாளருக்கு த.தே.கூட்டமைப்பு கண்டனம்..

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்தவர்களின் விபரத்தை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கோரியமை தொடர்பில் 

பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிப்பாளரிடம் எமது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஆ.சுமந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மே மாத இறுதிப் பகுதியில்  வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்தவர்களின் விபரத்தை வழங்குமாறு  பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வைத்தியசாலைத் 

தரப்புக்களிடம்  கோரியமை தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிப்பாளரிடம் எமது கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு குறித்த விபரம் மனிதாபிமான ரீதியிலும் சட்ட ரீதியிலும் 

முரணானது என்பதனையும் செட்டிக்காட்டியதோடு இவ்வாறான செயல்களின் மூலம் வைத்தியர்களை வீணான மன உலைச்சலுக்கு உட்படுத்த வேண்டாம். எனவும் கோரினோம்.

குறித்த விடயம் தொடர்பில் அண்மையில் ஒட்டுசுட்டான் பகுதியில் கைப்பற்றப்பட்ட கிளைமோர் குண்டு தொடர்பான சம்பவத்துடன் தொடர்புடைய முக்கியமான ஒருவரையும் 

தேடுவதாகவும் அதில் தேடப்படுபவரின் மனைவி குறித்த காலப்பகுதியில் குழந்தை பிரசவித்தார் . என்ற தகவலின் அடிப்படையிலேயே அந்த விபரத்தை கோரியதாக பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிப்பாளர் தெரிவித்தார்.

இருப்பினும் உங்கள் பணிக்காக சட்டத்திற்கு முரணாக வைத்தியசாலைத் தரவுகளை கோர முடியாது. அவ்வாறு கோரி வைத்தியசாலைகளின் பணிக்கு இடையூறு ஏற்படுவதனை அனுமதிக்க முடியாது.

இது தொடர்பில் அடுத்த கட்டமாக உயர்மட்டங்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும். என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு