இன்றைய ராசிபலன் - 01/10/2024, மீன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்...

ஆசிரியர் - Editor I
இன்றைய ராசிபலன் - 01/10/2024, மீன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்...

இன்றைய  பஞ்சாங்கம்

01-10-2024, புரட்டாசி 15, செவ்வாய்க்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி இரவு 09.39 வரை பின்பு அமாவாசை. பூரம் நட்சத்திரம் காலை 09.16 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் காலை 09.16 வரை பின்பு அமிர்தயோகம். முருக வழிபாடு நல்லது. 

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசிப்பலன் -  01.10.2024

மேஷம்

இன்று உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை தரும். தொழிலில் ஓரளவு லாபம் கிட்டும்.

ரிஷபம்

இன்று நீங்கள் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். தொழில் ரீதியான நெருக்கடிகளை சமாளிக்க கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். பிள்ளைகளின் படிப்பில் சற்று ஆர்வம் குறையும். பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். பொன் பொருள் சேரும்.

கடகம்

இன்று தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிட்டும். கடன் பிரச்சினைகள் குறையும். தெய்வ வழிபாடு நல்லது.

சிம்மம்

இன்று குடும்பத்தில் வியக்க வைக்கும் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.

கன்னி

இன்று நீங்கள் தொட்ட காரியம் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் வரவும் செலவும் சமமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது.

துலாம்

இன்று தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். பிள்ளைகள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி பாராட்டுதல்களை பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் தீரும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

விருச்சிகம்

இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் செயல்படுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சினை குறையும். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.

தனுசு

இன்று பணவரவு சுமாராக இருக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் சக தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மகரம்

இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்களால் டென்ஷன் உண்டாகும். உங்கள் ராசிக்கு மாலை 04.02 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பயணங்களை தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்வது உத்தமம்.

கும்பம்

இன்று உங்களுக்கு மன அமைதி குறையும். உங்கள் ராசிக்கு மாலை 04.02 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. பெரிய தொகைகளை கையாளும் போது நிதானமாக இருப்பது உத்தமம்.

மீனம்

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு மேலோங்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு