வைத்தியர் அர்ச்சுனாவுடன் வைத்தியசாலைக்குள் நுழைந்து வீடியோ பதிவு செய்தவர்கள் யார்? பொலிஸாருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு..

ஆசிரியர் - Editor I
வைத்தியர் அர்ச்சுனாவுடன் வைத்தியசாலைக்குள் நுழைந்து வீடியோ பதிவு செய்தவர்கள் யார்? பொலிஸாருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு..

வைத்தியர் அருச்சுனாவுடன் , மன்னார் வைத்தியசாலைக்குள் நுழைந்து காணொளிகளை எடுத்த இரு இளைஞர்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு மன்று பணித்துள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை இரவு , சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அருச்சுனா மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து 

காணொளிகளை எடுத்து , வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களை மிரட்டியதாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் வைத்தியசாலை நிர்வாகம் முறைப்பாடு செய்துள்ளது. 

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வைத்தியரை கைது செய்து நீதவான் முன்னிலையில் முற்படுத்தியதை அடுத்து, 

வைத்தியரை எதிர்வரும் 07ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். அந்நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை வைத்தியர் சார்பில் சட்டத்தரணிகள் மன்றில் நகர்த்தல் பத்திரம் ஊடாக பிணை விண்ணப்பம் செய்திருந்தனர். 

அதற்கு வைத்தியசாலை நிர்வாகம் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தமையால் , பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 

அதேவேளை வெள்ளிக்கிழமை இரவு வைத்தியருடன் வைத்தியசாலைக்குள் அத்துமீறி இரு இளைஞர்கள் நுழைந்து காணொளிகளை பதிவு செய்ததாக மன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், 

இருவர் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்து, விசாரணை அறிக்கைகளை எதிர்வரும் 07ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்க பொலிஸாருக்கு மன்று பணித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு