SuperTopAds

வவுனிக்குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கழுத்து நெரித்துக் கொலை! உற்கூற்று பரிசோதனையில் உறுதி...

ஆசிரியர் - Editor I
வவுனிக்குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கழுத்து நெரித்துக் கொலை! உற்கூற்று பரிசோதனையில் உறுதி...

வவுனிக்குளத்திலிருந்து நேற்றுமுன்தினம் (30.07.2024)  சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என முல்லைத்தீவு மாவட்ட சட்ட மருத்தவ அதிகாரியின் அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவியைச் சேர்ந்த ஆனந்தரசா ஜீவன் (வயது 27) என்ற இளைஞன் நேற்று வவுனிக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

திங்கள் கிழமை (29) இரவு  சுமார் இருபது இலட்சம் ரூபா பணத்துடன் யோகபுரத்தில்  இருந்து பாண்டியன் குளம் சென்ற குறித்த  இளைஞனைகாணவில்லை என உறவுகள் தேடிய நிலையில்,

செவ்வாய் கிழமை (30) அதிகாலை வவுனிக்குளம் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வருகைதந்து உடலத்தை  பார்வையிட்ட முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ் ஏச் மக்ரூஸ் சடலத்தை உடற்கூற்று பரிசோதனையின் பின்னர்உறவுகளிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்திருந்தநிலையில்.

நேற்று (31) முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் உடற்கூற்றுப் பரிசோதனை இடம்பெற்றது. உடற்கூற்றுப் பரிசோதனையின் முடிவில் குறித்த இளைஞன் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரியின்  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் நட்டாங்கண்டல்  பொலிஸார்  சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருகின்றார்கள்.