பிரிட்டன் பொதுத் தேர்தலில் முதல் தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினராக உமா குமரன் வெற்றி...
பிரித்தானிய வரலாற்றில் முதல் தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையையும் தனதாக்கிகொண்டுள்ளார்.
பிரித்தானிய பொதுத் தேர்தலில், தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழ்ப் பெண்ணான உமா குமரன் வெற்றிபெற்றுள்ளார்.
இவர், லண்டன் ஸ்டராட்ஃபோர்டு தொகுதியில் 19,145 வாக்குகளை பெற்று பெரும் வெற்றியடைந்துள்ள நிலையில்,
பிரித்தானிய வரலாற்றில் முதல் தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையையும் தனதாக்கிகொண்டுள்ளார்.
உமா குமரன் ஈழத்து தமிழ்ப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
உமா குமரனை எதிர்த்து போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான கேன் பிளாக்வெல், 3,144 வாக்குகள் மட்டுமே பெற்று நான்காவது இடத்தில் உள்ளார்.
பிரித்தானிய பொதுத் தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்த நிலையில், மொத்தமுள்ள 650 தொகுதிகளுக்கான வாக்கெண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றும் வரும் நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் கியெர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி,
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியை தோற்கடித்து மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.