பிரித்தானிய பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு வெற்றி - தோல்வியை ஒப்புக்கொண்ட பிரதமர் ரிஷி சுனக்

ஆசிரியர் - Admin
பிரித்தானிய பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு வெற்றி - தோல்வியை ஒப்புக்கொண்ட பிரதமர் ரிஷி சுனக்

பிரித்தானிய பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி மகத்தான வெற்றியை பெற்றுள்ளதோடு அக்கட்சி 410 ஆசனங்களை பெறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தொழிலார் கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

தொழிலாளர் கட்சி வெற்றி பெற தேவையான 326 ஆசனங்களை எட்டிய பிறகு, கட்சி ஆதரவாளர்களிடம் கெய்ர் ஸ்டார்மர் உரையாற்றியுள்ளார்.

வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறிய அவர், இது ஒரு பெரிய பொறுப்பு எனவும் நீங்கள் எங்கள் நாட்டை மாற்றிவிட்டீர்கள் எனவும் கூறியுள்ளார். 


தோல்வியை ஒப்புக்கொண்ட பிரதமர் ரிஷி சுனக்.

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தார் எனவும் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியடைந்ததற்குப் பொறுப்பேற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் எதிர்தரப்புத் தொழிற்கட்சி வென்றதாக சுனாக் குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்கட்சித் தலைவர் கியர் ஸ்டார்மரைத் தொடர்புகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்ததாக அவர் கூறினார்.

அமைதியான, சீரான முறையில் ஆட்சி கைமாறும் என்று சுனாக் உறுதியளித்தார். நாட்டின் நிலைத்தன்மைக்கும் எதிர்காலத்துக்கும் அது நம்பிக்கை அளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு