யாழ்.நெல்லியடியில் புடவை விற்பனை நிலையம் மீது பெற்றோல் குண்டு வீசிய வன்முறை கும்பல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நெல்லியடியில் புடவை விற்பனை நிலையம் மீது பெற்றோல் குண்டு வீசிய வன்முறை கும்பல்..

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள புடவைக்கடை ஒன்றின் மீது, நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை (25) இனம் தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். 

மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள், புடவைக்கடைக்கு பின் புறமாக வந்து பெற்றோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர். 

அதனை அவதானித்த கடை ஊழியர்கள் அப்பகுதியில் நின்றவர்கள் பெற்றோல் குண்டை வீசியவர்களை துரத்தி சென்ற போதிலும், அவர்கள் தப்பியோடி விட்டனர். 

சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளரால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு